பிக் பாஸ் 6: தொடங்கியது கதை சொல்லும் நேரம்.. ஆரம்பமே அசீம் சோக கதை.. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் இன்று கதை சொல்லும் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.

முதல் போட்டியாளராக அசீம் தன்னுடைய சோக கதையை கூறத் தொடங்கி இருக்கிறார்.

அசீம் முழுவதும் சொல்லி முடிப்பதற்கு பிக் பாஸ் வெளியேற்றி விட்டார்.

தொடங்கியது கதை சொல்லும் டாஸ்க்

தொடங்கியது கதை சொல்லும் டாஸ்க்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சம்ப்ரதாயமாக தொடர்ந்து வரும் வழக்கங்களில் ஒன்றுதான் கதை சொல்லும் டாஸ்க் இது தங்களுடைய மனதை பாதித்த சோக கதையை சொல்லி போட்டியாளர்கள் ரசிகர்களிடம் சென்டிமென்ட் வலையை வீசுவார்கள். இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று பலரும் கதைகளை திறந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.

அசீம் திருமண வாழ்க்கை

அசீம் திருமண வாழ்க்கை

ஆரம்பமே அசத்தலாக இருக்க வேண்டும் என்று டாஸ்கை படித்த அசீம் முதல் ஆளாக கதை சொல்ல தொடங்கி இருக்கிறார் .அதில் அவர் தன்னுடைய மனைவியும் குழந்தையும் பற்றி கதைகளை பேசிக் கொண்டிருக்கிறார் தன்னுடைய முந்தைய மனைவி இவர் மீடியாவில் இருப்பது தெரிந்து தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு இவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை குறித்தும் தன்னுடைய மகன் மீது இவர் வைத்திருக்கும் பாசத்தைக் குறித்தும், பேசிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் கொடுத்த வார்னிங்

பிக் பாஸ் கொடுத்த வார்னிங்

கதை சொல்லும் டாஸ்க்கில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களுடைய கதையை முழுமையாக முடித்து விட வேண்டும். அப்படி முடித்து விடுபவர்களுக்கு அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து விளக்கு அளிக்கப்படும் என்பதுதான் விதி. இதில் அசீம் தன்னுடைய கதையை நிறைவு செய்யாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு ரெட் பட்டனை அழுத்தி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் அசீம் நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் கதையை முடிக்கும் டாஸ்கிலிருந்து விலகி விட்டீர்கள் என்று வெளியே அனுப்பி விடுகிறார்.

இதுதான் காரணமாம்

இதுதான் காரணமாம்

வழக்கமாக சின்ன விஷயமாக இருந்தாலே அதை 10 நிமிடம் பேசும் அசீம் தன்னுடைய சோகக் கதையை சொல்வதற்கு நேரம் போதாது என்று நெட்டிசன்கள் இந்த ப்ரோமோவைப் பார்த்து கலாய்த்து வருகிறார்கள். முதல் வாரத்தில் ஜாலியாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் இப்போ அழுகாச்சி சீன் தொடங்கிவிட்டது. அதை ஆரம்பித்து வைத்திருப்பவர்கள் அசீம் தான். டாஸ்க் முடிந்து வெளியே வந்த பிறகும் கண்களை கசக்கி கொண்டு இவர் அழுவதை பார்த்து நெட்டிசன்கள் இவரை கலாய்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக கருத்துக்களையும் கூறி வருகிறார்கள். இன்றைய ப்ரோமோ வருவதற்கு ஒன்றரை மணி நேரம் லேட் ஆனதற்கு காரணம் இந்த அழுகாசி சீன்கள் தானா? என்று கமெண்ட்கள் அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+