மோதிக் கொள்ளும் போட்டியாளர்கள்.. நீயும் ஒரு பொண்ணு தானே? தனலட்சுமியிடம் தகராறு செய்யும் அசீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தற்போது மோதி கொள்கிறார்கள்.

தாங்கள் கையில் வைத்திருக்கும் பொம்மைகளை பாதுகாக்க வேண்டும் என்று போட்டியாளர்கள் முட்டி மோதி பிக் பாஸ் வீடு கலவரம் ஆகி இருக்கிறது.

புது பிரச்சனை

புது பிரச்சனை

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசனில் இன்று 17 வது நாள் தொடங்கி இருக்கிறது. இன்றைய முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் பொம்மைகளை பாதுகாக்க வேண்டி முட்டி மோதிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதில் யார் வெளியேற்றப்படுவார்? யார் கடைசியாக ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் கடந்த வாரத்தை போல இந்த வாரம் கலவரமாக மாறி இருக்கிறது.

சண்டையோடு களைக்கட்டும் சீசன்

சண்டையோடு களைக்கட்டும் சீசன்

ஆரம்பத்திலிருந்தே சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த ஆறாவது சீசனில் இன்று முதல் ப்ரோமோ வில் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஆயிஷாவும் டாஸ்க்கில் கலந்து கொண்டிருக்கிறார். அனைத்து போட்டியாளர்களும் தங்கள் கையில் வைத்திருக்கும் பொம்மைகளை காப்பாற்றுவதற்காக ஓடி கொண்டு இருக்கும்போது ஆயிஷா, ஷெரின், தனலட்சுமி மூவரும் கீழே விழுந்து விடுகிறார்கள். கீழே விழுந்த ஆயிஷா தனது தலையில் கை வைத்தபடி அமர்ந்து விடுகிறார்.

ஆயிஷாவுக்கு ஆதரவாக அசீம்

ஆயிஷாவுக்கு ஆதரவாக அசீம்

இதைப் பார்த்து காண்டான அசீம் நீ எதுக்கு இப்படி தள்ளிவிட்ட நீ ரொம்ப வயலன்டா இருக்க என்று தனலட்சுமி இடம் கையை நீட்டி பேசியபடி கத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு நான் எதுவும் தள்ளி விடவில்லை .யார் தள்ளிவிட்டார்? வேணும் என்றால் கேமராவில் பாருங்கள் என்று தனலட்சுமி தன் தரப்பு நியாயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மீண்டும் வந்த அசீம் "பொண்ணு தானே நீயும்? அறிவுங்குறது கொஞ்சம் கூட இல்லையா? உடம்பு சரியில்லாத பெண்ணை இப்படியா தள்ளி விடுவா? என்று ஆயிஷாவுக்கு ஆதரவாக கத்தி குரல் கொடுத்து வருகிறார்.

ரசிகர்களின் கருத்துக்கள்

ரசிகர்களின் கருத்துக்கள்

அசீம் பேசுவதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்த தனலட்சுமி அப்படியே திரும்பி விடுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர், தனலட்சுமிக்கு பெரிய வில்லினு நினைப்பா? பேஸ் எக்ஸ்பிரஷன் பார்த்தாலே காண்டாகுது என்று கலாய்த்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் அசீம்,கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க..! தனலட்சுமி தான் கீழே விழுந்தார் என்று ஒருவர் தனலட்சுமிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருக்கிறார். இன்னொருவர் மீரா மிதுனை கூட திருப்பி உள்ளே விடுங்க, ஆனால் அசீமை மட்டும் வெளியே அனுப்பிவிடுங்க என்று கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+