Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதை எதிர்பார்க்கவில்லை,"இனி என் வாழ்வில் நீங்கா இடம் பெறும்” உருக்கமாக பதிவிட்ட ரட்சிதாவின் கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரட்சிதாவின் கணவரான சின்னத்திரை நடிகர் தினேஷ் கார்த்திக் தற்போது ரசிகர்களிடம் நன்றி கூறி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் அதிகமாக நெகட்டிவ் கருத்துகள் தான் இருக்கும் ஆனால் அதிலும் பலர் பாசிட்டிவ் கமாண்டுகளோடு சொன்ன வார்த்தை மனதை நெகிழ வைத்துள்ளதாக தினேஷ் பகிர்ந்து இருக்கிறார்.

சின்னத்திரை தம்பதிகள்

சின்னத்திரை தம்பதிகள்

சின்னத்திரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலிக்க திருமணம் செய்வது என்பது புதிதல்ல. அந்தக் நாட்களில் இருந்தே அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை தம்பதிகளாக முதல் சீரியலில், அறிமுகமாகி திருமணமான ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் பலருக்கும் பேவரைட் ஜோடியாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் ரட்சிதா தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கிறார். அவர் தினேஷ் கார்த்திக்கை பிரிவதற்கு காரணம் தினேஷ் எந்த சீரியலிலும் நடிக்காமல் வீட்டிலேயே இருப்பது தான் என்று ஒரு சில கருத்துக்கள் வெளியாகி இருந்தது.

நடிப்பும் வாழ்க்கையும்

நடிப்பும் வாழ்க்கையும்

தினேஷ் கார்த்திக் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ரட்சிதாவோடு நடித்திருந்தார். அதற்கு பிறகு ரட்சிதா பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அது போல ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் தினேஷ் மீண்டும் சீரியலில் அறிமுகமாகி இருந்தார். இந்த சீரியலில் இவர் நடிகை ரேஷ்மாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். திடீரென இந்த சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டார் .அதற்குப் பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் தன்னுடைய மனைவி ரட்சிதாவுடன் சேர்ந்து ஜீ தமிழில் நாச்சியார் புரம் என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் கொரோனா காலகட்டத்தில் திடீரென முடிக்கப்பட்டது. இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியதும் ரசிகர்கள் பலர் இவர்கள் இருவரும் மீண்டும் சீரியலில் நடிப்பதை ஆதரித்து வந்தனர். ஆனால் முடிக்கப்பட்டதும் பலருக்கு வருத்தம் தான். இந்த நிலையில் ரட்சிதா அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் தினேஷ் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 வில் நடித்து வருகிறார்.

தினேஷ் கொடுக்கும் ஆதரவு

தினேஷ் கொடுக்கும் ஆதரவு

அதுபோல ஜீ தமிழில் விரைவில் வர இருக்கும் ஒரு சீரியலிலும் இவர் நடிக்க இருக்கிறாராம். கதாநாயகனாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் தினேஷுக்கு ரசிகர்கள் அதிகமானோர் சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற முதல் நாளே அவருக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவே இவர்களுக்குள் இருந்த பிரச்சனைகளில் சிறிது என்பதும் அது சீக்கிரத்தில் தீர்ந்துவிடும் என்பதை குறிப்பதாக இருப்பதாக பலரும் கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ரட்சிதா பற்றி தினேஷ் செய்தி சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து அவருக்கு ஆதரவாக கமெண்ட்களை அனுப்பி வந்தனர்.

இனி நல்லவையே நடக்கும்

இனி நல்லவையே நடக்கும்

அதில் அதிகமானோர் ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை கூறி தான் கருத்து தெரிவித்து இருந்தனர். அதற்கு இன்று நன்றி கூறி, "எங்கள் நலனில் அன்பு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கும் சோசியல் மீடியாவில் இவ்வளவு பாசிட்டிவ் கமெண்டோடு பல நல்ல மனிதர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் அக்கறையுடன் நீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் என் வாழ்வில் நீங்கா இடம்பெறும், நல்லதை நினைக்க நல்லவையே நடக்கும்" என்று கூறியிருக்கிறார். அதில் நீங்கா இடம்பெறும் என்ற வார்த்தையை போல்டாக இருப்பதால், மீண்டும் இவர்கள் இருவரும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சேர்ந்து வாழ்வதற்கு ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் எதிர்பார்த்தப்படியே இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் இனி ரட்சிதா தன்னுடைய விளையாட்டை சுயமாக விளையாடி வருவார் என்பது பலருடைய கணிப்புதான். அதுமட்டுமல்லாமல் வீடியோவில் தினேஷ், மைனா நந்தினியும், ராபர்ட் மாஸ்டரும் இல்லை என்றால் ரட்சிதா கண்டிப்பாக பைனல் போவார் என்று கூறியிருந்தார். அதுபோல நடக்கும் என்று பலர் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+