இதற்காகத்தான் இத்தனை தில்லாலங்கடியா? பிக்பாஸை கிழிக்கும் நெட்டிசன்கள்.. ஆதாரம் இது தானாம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத வெளியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தது.
கடைசி நேரத்தில் தொடர்ந்து ஏமாற்றம் கிடைத்து வந்த ரசிகர்களுக்கு இப்போது அதற்கான காரணம் தெரிந்து விட்டது என கலாய்த்து வருகிறார்கள்.
மணிகண்டன் ஒவ்வொரு வாரமும் தப்பித்து வந்தது அவருடைய குடும்பத்தினர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவேண்டும் என்பதற்காகத்தான் என்று ரசிகர்கள் ஆதாரத்தோடு கலாய்த்து இருக்கிறார்கள்.

இப்போ ஒன்பது போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 80-வது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதில் ஒரு சில வாரங்களாகவே யாரும் எதிர்பார்க்காத பல வெளியேற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதைக் குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் தாங்கள் ஓட்டு போட்டு தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை காப்பாற்றினாலும், அவர்கள் அதிகமான வாக்குகளின் அடிப்படையில் முன்னணியில் இருந்தாலும் கடைசி நேரத்தில் அவர்கள் வெளியேற்றப்படுவது சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

எதிர்பார்க்காத வெளியேற்றங்கள்
அதுவும் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜனனியின் திடீர் வெளியேற்றம் மற்றும் கடந்த வாரம் தனலட்சுமியின் வெளியேற்றம், இரண்டுமே ரசிகர்கள் எதிர்பார்க்காதது தான். ஆரம்பத்தில் தனலட்சுமி விளையாட்டு வேகமாக மாறியதும், அவருக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு வாரமும் அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் மட்டும்தான் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். எதிர்பார்க்காத வகையில் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார்.

ரசிகர்களின் கேள்வி
ஆரம்பத்தில் ஒரு சில போட்டியாளர்கள் வெளியேறும் போது கூட அதை குறித்து கமல் எதுவும் சொல்லப்படாத நிலையில், கடந்த வாரம் வெளியேறிய தனலட்சுமி மற்றும் ஜனனியின் வெளியேற்றத்தின் பொழுது தான் கமல்ஹாசனின் முகமும் மாறி இருந்தது என்றும், அதனால் இது கமலை மீறியும் நடக்கும் சூழ்ச்சி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வாரம் மணிகண்டனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். குறிப்பாக அவருடைய தங்கையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் மணிகண்டனின் குடும்பத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் மணிகண்டனை ஒவ்வொரு வாரமும் தலைவர் பதவியில் சேவ் செய்து அவர் காப்பாற்றப்பட்டாரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

காப்பாற்ற காரணம் இதுதானா
தலைவர் பதவிக்கு அந்த வாரம் முழுக்க அவர்கள் விளையாடிய விளையாட்டின் அடிப்படையில் அவர் பெஸ்டாக இருக்கிறார் என்று போட்டியாளர்கள் தான் ஒரு சிலரை தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குள் வைக்கும் போட்டியில் ஜெயித்தால் மட்டும் தான் தலைவர் பதவி கிடைக்கும் என்று சிலர் அவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறிய பிறகு அப்படியானால் ஜனனி வெளியேறிய வாரத்தில் ஓட்டு அடிப்படையில் மணிகண்டன் கடைசி நேரத்தில் இருந்தார் ஆனால் அவர் காப்பாற்றப்பட்டு சற்றும் எதிர்பாராமல் மூன்றாவது இடத்தில் அதிகமாக வாக்குகள் பெற்று இருந்த ஜனனி வெளியேறியது எதற்காக என்று சிலர் பதில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications