ஆபாசம்.. பிக் பாஸ் செரினாக்கு தொல்லை கொடுத்த டிரைவர்.. வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ! அதிர்ச்சி சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த செரினா சமீபத்தில் காவல் நிலையத்தில் தன்னுடைய முன்னாள் கார் ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார். அதில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கிறது.
தன்னுடைய வீட்டில் டிரைவராக வேலை பார்த்த ரவுடியின் தம்பியை தான் வேலையை விட்டு தூக்கியதால் தனக்கு கொடுத்த தொந்தரவுகள் மற்றும் மிரட்டல்கள் பற்றி செரினா கம்ப்ளைன்ட் கொடுத்ததால் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் செரினா இவர் கேரளாவை சார்ந்தவர். ஆனால் பெங்களூரில் தான் பிறந்து வளர்ந்து இருக்கிறார். இவர் மாடலாகவும் நடிகையாகவும் மட்டுமல்லாமல் சாய் ராம் மோட்டார்ஸ் என்ற ஒரு நிறுவனத்தையும் பெங்களூரில் நடத்தி வருகிறார். மேலும் UVI என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அதுபோல செரினா பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டு பட்டம் பெற்று இருக்கிறார். குறிப்பாக Grazia Ford super of Indian wor என்ற பட்டத்தை வெற்றி பெற்று இருக்கிறார். இதைப்பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெருமையாக செரினா பேசி இருந்தார். ஆனால் தான் ஒரு நடிகை என்பதும் ஏற்கனவே சமுத்திரக்கனி இயக்கிய சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் வெளியாகி இருந்த வினோத சித்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் தீபக்கு மனைவியாக செரினா நடித்திருந்தார் என்பதை சொல்லவில்லை.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக செரினா தமிழில் பேசாமல் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் மேடையிலேயே கமலும் இவரை வார்னிங் செய்திருந்தார். அதோடு இவருடைய எலிமினேஷன் கார்டில் இவருடைய பெயர் கூட மலையாளத்தில் இருந்தது. இப்படியாக அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு செரினா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்த நிலையில் தான் செரினாவுக்கு வாட்ஸ் அப் மூலமாக ஆபாசமாக மிரட்டல் விடுத்ததாக அவருடைய முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கடந்த மாதம் 20ஆம் தேதி சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் செரினா புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தன்னிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த கார்த்திக்கும் அவருடைய நண்பர்களும் போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள் என்று கூறியிருந்தாராம்
அதோடு பாலியல் தொல்லைகளும் தந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தாராம். அந்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணை நடத்திய போலீசார் கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களை மயிலாடுதுறையில் வைத்து கைது செய்துள்ளனர். அதாவது மயிலாடுதுறையை சார்ந்த கார்த்திக் ரவுடி ஒருவரின் தம்பி என்று செரினாவிற்கு தெரிய வந்ததால் அவரை டிரைவர் வேலையில் இருந்து செரினா நீக்கியதாகவும் இதனால் கார்த்திக்கும் அவருடைய நண்பரும் செரினாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications