பைனலுக்கு போவது இவங்க தான்.. சூடு பிடிக்கும் விளையாட்டில் லீக் ஆகிய கடைசி முடிவு..டிக்கெட் யாருக்கு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் தொடங்கியிருக்கிறது.
இந்த வாரம் யார் நேரடியாக பைனலுக்கு போவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாக அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் உள்ளே நடக்கும் நிகழ்வுகளில் இப்போதே இறுதி முடிவை ரசிகர்கள் கூறத் தொடங்கி விட்டார்கள்.

திணற வச்சுட்டாரே பிக் பாஸ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன்கு நேற்று பிக் பாஸ் புது விதமாக யோசித்து அனைவரையும் தனித்தனியாக கூப்பிட்டு குழப்பி இதுவரைக்கும் அவர்கள் செய்ததை சொல்ல வைத்து, அவர்கள் செய்ததையே அவர்களையே மறக்க வைத்து பிக் பாஸ் அனைவரையும் கதி கலங்க வைத்திருந்தது. என்னதான் உள்ளே இருக்கும் எட்டு போட்டியாளர்களில் தாங்கள் தான் ஜெயிக்க போறோம் என்று போட்டியாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் தாங்கள் இதுவரைக்கும் செய்ததையே அவர்களால் சொல்ல முடியாமல் பலரும் திணறி தான் வந்தனர். ஆனால் எல்லோருக்கும் டஃப் கொடுக்கும் விதமாக அசீம் மிரட்டி விட்டார்.

என்னம்மா யோசிக்கிறாங்கப்பா
ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பத்து நிமிடம் கொடுத்து அதில் பிக் பாஸ் குழப்பும் விதமாக கேள்வி கேட்கும்போது, யாராலையும் பதில் சொல்ல முடியாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அப்படியே ஆப் ஆகிவிட்டனர். ஆனால் அசீம் சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு என்ன கேட்டாலும் நான் சலிக்கவே மாட்டேன் என்று வாயாலேயே வடை சுட்டு பிக் பாஸ்க்கு டப் கொடுக்கும் விதத்தில் பேசி உள்ளிருக்கும் போட்டியாளர்களே என்ன ஆனது அசீமுக்கு இவ்வளவு நேரமாக வெளியே காணவில்லையே? அவருக்கு மட்டும் என்ன என்று பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அனைத்து போட்டியாளர்களிடமும் உள்ளே நடந்த விஷயங்களை வெளியே சொல்ல கூடாது என்று பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தாலும் அசீமுக்கு என்ன நடந்தது என்பது தெரிந்து கொள்வதற்காக அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

டிக்கெட் டூ பினாலே
இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து அசீம் தப்பித்துக் கொண்டார் என்று செய்தி வந்ததும் போட்டியாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. இதைத்தொடர்ந்து இன்று இந்த வாரம் முழுக்க டிக்கெட் 2 ஃபினாலே டாஸ்க்கான போட்டிகள் நடைபெறுகிறது. அதில் யார் அதிகமாக வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நேரடியாக இறுதி வாரத்திற்குள் நுழைந்து கொள்ளலாம் என்று அவர்களுக்கு ஸ்பெஷல் சலுகை கொடுக்கப்பட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் வெறிகொண்டு விளையாட்டு தொடங்கி இருக்கின்றனர்.ஆனால் இப்போது வரைக்கும் மைனா தான் அதிகமான பாயிண்டுகளை வைத்திருக்கிறார்.

அது யாராக இருக்கும்
காலையில் நடைபெற்ற பந்து உருட்டுதல் போட்டியில் மைனா வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்ததாக இரண்டு போட்டியாளர்களில் ஒருவரை மாற்றி ஒருவர் யார் சிறந்தவர் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தனர் .அதில் ரச்சிதா மற்றும் அசீம் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே முட்டி மோதிக் கொண்டு இருந்தாலும் இன்று நாங்கள் கேள்வி கேட்கிறோம் என்று மாறி மாறி கேள்வி கொண்டு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். நேற்று பிக் பாஸ் முன்பு ஒன்றரை மணி நேரமாக பேசிய அசீமால் இன்று ரட்சிதாவிடம் பேசுவதற்கு பெரிய விஷயமாக இருக்காது என்பது இன்று பார்க்கும் போதே தெரிகிறது. ரட்சிதாவை பேச விடாமல் அசீம் அடுத்தடுத்த கேள்விகளால் கேட்டுக் கொண்டிருக்க ரச்சிதா பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்ப வரைக்கும் விளையாட்டுகளில் அடிப்படையில் அமுதவாணன், மைனா, ஏ டி கே என மூன்று பேர் இருக்கின்றார். அவர்களில் ஒருவர்தான் டிக்கெட் டூ பினாலே ஜெயிக்கப் போகிறார்கள் நேற்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications