விசித்திராவோடு ஜோவிகாவுக்கு பிரச்சனை.. கமலை டேக் செய்து வனிதா போட்ட பதிவு.. அப்பா அனுப்பியதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஜோவிகாவிற்கு நடிகை விசித்திராவிற்கும் படிப்பு விஷயத்தில் வாக்குவாதம் நடைபெற்றது.

bigg boss tamil season 7 Actress Vanithas post in support of Jovika

இந்த நிலையில் நடிகை வனிதா தன்னுடைய X தளத்தில் ஜோவிகாவிற்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தபடியே பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி கடந்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து அடிக்கடி போட்டியாளர்களிடம் கருத்து மோதல்களும் கலவரங்களும் வெடித்து வருகிறது.

bigg boss tamil season 7 Actress Vanithas post in support of Jovika

ஒவ்வொரு நாளும் ப்ரோமோக்களில் சண்டை காட்சிகள் பஞ்சமில்லாமல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் நேற்றைய எபிசோடில் விசித்திரா நடிகை வனிதாவின் மகளான ஜோதிகாவிடம் நீ தமிழில் எழுதி காட்டு என்று சொல்ல, அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரலை, அதனால நான் எழுதமாட்டேன். வராத ஒன்றை எதற்கு பண்ணனும்? என்று சண்டை போடுகிறார். அதே நேரத்தில் தான் ஒன்பதாம் வகுப்போடு தனக்கு படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்தி விட்டேன்.

bigg boss tamil season 7 Actress Vanithas post in support of Jovika

அதே நேரத்தில் படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை என்று இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் இருக்கிறது. அந்த திறமையின் படி நம்முடைய வாழ்க்கையை கொண்டு போக வேண்டும். எனக்காக எவ்வளவோ முயற்சிகளை எங்க அம்மா எடுத்தாங்க ஆனால் என்னால் முடியவில்லை இப்பொழுது அவங்க விட்டுட்டாங்க. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று முதல் நாளே ஜோவிகா கூறியிருந்தார்.

இந்த நிலையில் யாராயிருந்தாலும் அவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்று நேற்றைய தினம் விசித்திரா பேசி இருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து ஜோவிகாவும் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஜோவிகாவின் அம்மாவான வனிதா தன்னுடைய X தளத்தில் ஜோவிகாவின் அப்பா எனக்கு இதை பதிவேற்றுமாறு அனுப்பினார் என்று சில வார்த்தைகளை பதிவிட்டு இருக்கிறார். அதில் "பெற்றோர் பிள்ளைகளுக்கு எது சிறந்தது என தெரிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்" எனக் கூறி தன்னுடைய மகள் வாசித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் "இன்று பூமியில் ஓர் நியாயம் கிடைக்காதா? தாயின் அருமை புரியாதா? இந்த நாட்டின் நிலைமை தெரியாதா? சாகும் நிலையை தெரிந்து கொண்டே ஏன் மனிதன் பணத்தை தேடுகிறான்..? இருட்டில் வாழும் சாயம் இன்று போகாதா? சிறுவர் சாயம் ஏற்று கலங்க ஏன் இந்த நாடு கேட்கவில்லை. ஆங்கில மொழி முக்கியம் என்று கருதுகிறான். ஏன் நல்லதையும் சாகடிப்பான். மனிதன் ஒரு மிருகம் என்று நிரூபிப்பேன் நான்.. என அதில் அந்த கவிதையை வனிதாவின் மகள் வாசித்து இருக்கிறார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+