ஜோவிகாவை நான் குறை சொல்ல விரும்பல.. ஆனா அவங்க 2 பேரு செஞ்சது சரியில்ல.. விசித்ராவின் கணவர் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே கல்வி குறித்து எழுந்த விவாதத்திற்கு முதல்முறையாக நடிகை விசித்ராவின் கணவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

அதில் விசித்ரா சொன்னதில் எந்த தப்பும் இல்லை. அதே நேரத்தில் ஜோவிகா குழந்தை. அவருக்கு சரி எது தப்பு எது என்று சரியாக தெரியவில்லை. ஆனால் உள்ளே இருந்த போட்டியாளர்கள் ஒரு சிலர் செய்ததுதான் தவறு என்று விசித்ராவின் கணவர் கூறி இருக்கிறார்.

bigg boss tamil season 7: Actress Vichitras husband interviewed about jovika issue

அதுபோல நடிகர் கமல்ஹாசன் பேசியது குறித்தும் விசித்ராவின் கணவர் விமர்சித்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ஆரம்பமான முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகள் தொடங்கும் விதமாக பிக் பாஸ் புது புது டாஸ்க் கொடுத்து வருகிறார். அதுபோல பிக் பாஸ் நினைத்த மாதிரியே போட்டியாளர்களும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போது சண்டை வருகிறது, யார் யார் சண்டை இழுக்க போகிறார்கள் என்பதை யோசிக்க முடியாத வகையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு விசித்ரா எதார்த்தமாக பேசிக் கொண்டிருக்கும்போது எல்லோரும் அடிப்படை கல்வி கட்டாயமாக படிக்க வேண்டும், அதிகமாக படிக்கவில்லை என்றாலும் ஒரு பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் தான் நல்லது என்று கூற அப்போது இந்த கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜோவிகா பேசினார்.

அதோடு எனக்கு படிப்பு வரவில்லை. அதற்காக நான் படிப்பதை விட்டு விட்டேன். ஆனால் என்னுடைய திறமையின் படி நான் வேறு துறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். நடிப்புத் துறையில் நான் டிப்ளமோ படித்திருக்கிறேன் என்று ஜோதிகா சொல்லி கொண்டிருக்க, என்னதான் எது படித்து இருந்தாலும் அடிப்படைக் கல்வியை கற்று இருந்தால் தான் எந்த இடத்திலும் யாருடைய தயவும் இல்லாமல் இருக்க முடியும் என்று விசித்ரா, ஜோதிகாவிற்கு மறுப்பு தெரிவித்து பேச, இப்படியாக இவர்கள் இருவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விட்டது.

அது குறித்து கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் பேசி இருந்தார். அப்போது படிக்காமல் சாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் படிப்பின் அருமை என்னை போல ஜோவிகாவிற்கு பிறகு தெரிய வரலாம். அதேபோல கற்றல் விதி இருக்கலாம் தவிர கற்றல் வதை இருக்கக் கூடாது என்றெல்லாம் இரண்டு பக்கமும் பூசி முழுகின மாதிரி கமலும் கருத்து கூறியிருந்தார். இது குறித்து அதிகமான விவாதங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை விசித்ராவின் கணவர் முதல் முறையாக தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார.

bigg boss tamil season 7: Actress Vichitras husband interviewed about jovika issue

அதில் படிப்பு என்பது கட்டாயம் என்று விசித்ரா சொன்னது போல எனக்கு தெரியவில்லை. அடிப்படை கல்வி என்பது முக்கியம் என்று சொல்லியிருந்தார். கல்வியின் முக்கியத்துவம் பல பேருக்கு தெரியும். இப்போதைய சூழ்நிலையில் அதை சிலர் அலட்சியப்படுத்தி இருந்தாலும் சில வருடங்கள் கழித்து அவர்களுக்கு அதோட அருமை புரிய தான் செய்யப் போகிறது. அதே நேரத்தில் கமல் பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் கல்வி குறித்து சரியான விளக்கம் கொடுக்காதது எனக்கு வருத்தம் தான்.

ஆனால் நான் ஜோவிகா மீது குற்றம் சொல்ல விரும்பவில்லை. காரணம் அவர் ஒரு குழந்தை. அவருடைய வயது அப்படி இருக்கிறது. அவர் பக்குவப்படாமல் பேசுகிறார். ஆனால் அவர் பேசுவதை தவறு என்று சொல்லவும் முடியாது. அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு பேரு செய்த செயல் தவறானது. அதை நான் கண்டிக்கிறேன். அதில் மாயா விசில் அடித்துக் கொண்டாடியது... அதுபோல பவா செல்லத்துரை படிப்பு முக்கியமில்லை என்று பேசியது ஏற்றுக்கொள்ளக்கூடியது கிடையாது.

அவர் ஒரு எழுத்தாளர் அவர் எப்படி இந்த வார்த்தையை சொல்லலாம்? படிப்பின் முக்கியத்துவத்தை அவர்தான் உணர்த்த வேண்டும். அவரே படிப்பு முக்கியம் இல்லை என்று பேசும்போது இது ஏற்றுக் கொள்வதாக இல்லை. அதுபோல மாயாவும் இரண்டாவது ஸ்டேஜ் வயதில் தான் இருக்கிறார். அவர் விசில் அடித்துக் கொண்டாடியது சரி என்று படவில்லை. அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் நிக்சன் ஜோவிகா பேசும் போது கைதட்டினார்.

அவரும் சிறு வயது பையன்தான் அதனால் அவருக்கும் சரியான பக்குவம் இல்லை. அதனால் அவரையும் நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் பவா செல்லத்துரை மாயா செய்ததை தான் ஏற்றுக் கொள்ள முடியாது. தப்பு யாரு பண்ணுனாலும் அது தப்புதான். அது இவர்கள் இருவரும் செய்தது சரி இல்லை.

அதுபோல கமல்ஹாசனும் படிப்பின் முக்கியத்தை அந்த நிகழ்ச்சியில் சரியாக விளக்கி சொல்லி இருந்தால் பல பேருக்கு உத்வேகம் கொடுத்திருக்கும். ஆனால் அவர் அந்த இடத்தில் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சரியாக தெளிவுபடுத்தவில்லை என்று நடிகை விசித்ராவின் கணவர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+