கமலை பார்த்து விசித்ரா கேட்ட ஒரே ஒரு கேள்வி.. ஆடிபோன பிக்பாஸ்..குறும்படம் போட்டும் பதில் கிடைக்கலையே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 11ஆம் எபிசோடில் கமலிடம் நடிகை விசித்திரா பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது குறித்து கேள்வி கேட்டிருந்தார்.
பெண்களுக்கு பிரச்சனை என்றதும் ரெட் கார்ட் கொடுத்த நீங்கள் ஒரு வாரமாக சில பெண்களால் எங்களுக்கும் பிரச்சனை அதற்கு தண்டனை கிடையாதா? என்று விசித்திரா கமலிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு நடிகர் கமல்ஹாசன் யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கூறியிருந்தார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கடந்த சனிக்கிழமை நடந்த திடீர் ரெட் கார்ட் பிரச்சனையால் இந்த வார சனிக்கிழமை எபிசொட்டில் கமல் என்ன பேசப்போகிறார் என்று ரசிகர்கள் ஒருவாரமாக காத்திருந்தனர். அதுவும் நேற்று ப்ரோமோ வெளியானதும் இன்று நிறைய குறும்படங்கள் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
அதனாலேயே நேற்றைய எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று கமல் சொல்லும் விளக்கத்தால் அவருடைய அரசியல் வாழ்க்கையிலும் பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் அதனால் இதை எவ்வளவு லாபகமாக கையாள போகிறார் என்பது பலருடைய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
இந்த நிலையில் நேற்று புல்லி கேங்குக்கு எதிராக கமல் தன்னுடைய கருத்தை தெளிவாக எடுத்து வைத்திருந்தார். அதோடு தானாக ரெட் கார்ட் பிரதீப்புக்கு கொடுக்கவில்லை என்றும், புல்லி கேங் போட்டியாளர்கள் சொன்ன குற்ற சாட்டுகளாலும் அதை சொன்ன முறையாலும் தான் நான் ரெட் கார்டு கொடுத்தேன் என்று கமல் விளக்கம் கொடுத்திருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் விசித்திரா யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டக் என்று ஒரு கேள்வியை கமலிடம் கேட்டிருந்தார்.
அதில் கமல் புல்ல் கங்கை விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது விசித்திரா சார் போனவாரம் சில பெண்களுக்கு ஒரு ஆணால் பிரச்சனை என்று சொன்னதும் ரெட் கார்ட் கொடுத்தீங்க. ஆனால் ஒரு வாரமாக சில பெண்களால் எங்களுக்கு பிரச்சினையாக இருந்தது அப்போ அவங்களுக்கு தண்டனை கிடையாதா என்று கேட்டிருந்தார்.
அதற்கு கமல்ஹாசன், ஏன் தண்டனை கிடையாது இங்கே அதிகமான ரெட் கார்ட் இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனாலும் கடைசி வரைக்கும் பல குறும்படங்கள் போட்டு புல்லி கேங்களின் பல தில்லாலங்கடி பிளான் எல்லாம் போட்டு உடைத்த கமல்ஹாசன் அவர்களுக்கு தண்டனை என்ன என்பதை பற்றி சொல்லவே இல்லை இது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே பிரதீப் தரப்பில் தான் எடுத்தது சரியான முடிவு என்பதை நிரூபிப்பதற்காக விசித்திரா விடமும் பிரதீப் உங்களிடம் ஆரம்பத்தில் தவறாக நடந்து கொண்டது உண்மை தானே? அவர் தவறாக பேசியது தப்பு தானே? என்று அழுத்தமாக மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு அதை பதிவு செய்திருந்தார்.
அதைத்தொடர்ந்து புல்லி கேங்குகளிடமும் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு உண்மைதானே என்பதை கமல்ஹாசன் நிரூபித்து இருந்த நிலையிலும் ஒரு வாரமாக கூட்டமாக சேர்ந்து விசித்ரா மற்றும் அர்ச்சனாவை புல்லி கேங் பல பிரச்சனைகள் கொடுத்ததற்கு கமல் நேற்று எந்த தண்டனையும் கொடுக்காமல் இருந்தது விசித்திரமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications