பிக் பாஸ் 7: இந்த வாரம் இரண்டு எலிமினேஷனா? கூல் சுரேஷ் இப்படி பண்ணிட்டாரே! பிக் பாஸின் சதி வேலை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 11ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் எலிமினேஷனுக்கான ஓபன் நாமினேஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் தாங்கள் யாரை நாமினேட் செய்கிறோமோ அவர்களுடைய துணிகளை ஒரு பெட்டிக்குள் போட்டு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்கின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 10வது வாரத்தை கடந்து இருக்கிறது. இதில் பிக் பாஸ் வீட்டிற்கும் இப்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், மணி, விசித்திரா ஆகிய ஐந்து பேர் நாமினேட் ஆகிய இருந்தனர்.
இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் ஒருவர் கண்டிப்பாக வெளியே வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விஜய் டிவி மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால் இந்த வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்திருந்தது.

இதனால் ரசிகர்கள் கடுப்பாகி இருந்தனர். காரணம் இந்த வாரம் நிக்சன் வெளிவருவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் நிக்சனை விஜய் டிவி காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று பலரும் கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் ஓப்பன் ஆக நடைபெறுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில முறை நாமினேஷன் நடைபெறும் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமாக செய்து இருப்பார்கள். அந்த மாதிரி தான் இந்த முறையும் கூட போட்டியாளர்கள் தங்களுடைய துணிகளை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அவர்களை நாமினேஷன் செய்பவர்கள் அவர்களுடைய துணிகளை வாங்கி அங்கிருக்கும் ஒரு பெட்டிக்குள் போடுகின்றனர்.
இது வித்தியாசமாக இருக்கிறது. எதற்காக இப்படி ஒரு முறையை பிக் பாஸ் தொடங்கினார் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த முறை முதல் ஆளாக அர்ச்சனா நிக்சனை நாமினேஷன் செய்கிறார். அதோடு எதற்காக நான் நிக்சனை நாமினேஷன் செய்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து விஷ்ணு தவறை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு உங்க டிக்ஷனரில் இருக்கா என்பது தெரியல அதனால பூர்ணிமாவை நான் நாமினேஷன் செய்கிறேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக விசித்ரா தினேஷை நாமினேட் செய்கிறார். கூல் சுரேஷ் விசித்திராவை நாமினேட் செய்கிறார். அப்போது இவங்க இந்த தமிழ்நாட்டிலேயே இருக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வாரத்தில் எப்படியும் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்ற படாத நிலையில் இந்த வாரம் அதையும் சேர்த்து இரண்டு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இன்னும் ஐந்து வாரம் மட்டுமே நிகழ்ச்சி இருக்கும் நிலையில் இந்த முறையும் நிக்சனை காப்பாற்றுவதற்காக தான் இப்படி ஓபன் நாமினேஷன் வைத்திருக்கிறாரா? இது பிக் பாஸ் செய்யும் சதியா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications