பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த உறவினர்கள்.. தினேஷ் பக்கத்துல யாரு பாருங்க!?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 19ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.
அதில் போட்டியாளர்கள் தங்களுடைய உறவினர்களை பார்த்ததும் கண்கலங்கி எமோஷனலாகி இருக்கின்றனர். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில டாஸ்க் சம்பிரதாயம் போல ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த இந்த சீசனில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இந்த டாஸ்க் நடைபெறும் வரைக்கும் எப்படியாவது பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து விட வேண்டும் என்று பல போட்டியாளர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் இந்த வாரத்தில் 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் இவர்களுடைய பெற்றோர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார்கள். அது குறித்து தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். அதில் பல உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இந்த டாஸ்க்கில் முதல் ஆளாக பூர்ணிமாவின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வர பூர்ணிமா ஓடி சென்று கட்டி அணைத்துக் கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து அர்ச்சனாவின் பெற்றோர் வருகின்றனர். அர்ச்சனாவும் தன்னுடைய தந்தையை கட்டி அணைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். அதற்கு அடுத்ததாக விக்ரம் பெற்றோர் வருகிறார்கள். அதுபோல விஜய் வர்மாவின் பெற்றோர்களும் வந்திருக்கின்றனர். இப்படியாக பல போட்டியாளர்கள் வீட்டில் இருந்து பல பெற்றோர்கள் வந்திருக்கும் நிலையில் தினேஷ் தனக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் ரட்சிதா வருவார் என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்.
ஆனால் இப்போது வெளியான ப்ரோமோவில் தினேஷ் தரப்பில் இருந்து யார் வந்திருக்கிறார்கள் என்பதை காட்டவில்லை. அதே நேரத்தில் அர்ச்சனாவின் பெற்றோர் தினேஷின் கையை பிடித்துக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கின்றனர். இதற்கு முந்தைய சீசன்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் யாருக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறதோ அவர்களிடம் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் பல பெற்றோர்கள் பாசமாக நடந்து கொள்வதை பார்த்து இருக்கிறோம்.
அந்த மாதிரி இந்த முறை தினேஷிடம் அர்ச்சனாவின் பெற்றோர் நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல விசித்திரா, விஷ்ணு, மாயா, நிக்சன் குடும்பத்தினர் முதல் ப்ரோமோவில் காட்டப்படவில்லை. இதனால் இவர்கள் வருகை இரண்டாவது ப்ரோமோவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல இந்த வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் நிக்சன், விசித்திரா, விக்ரம் மற்றும் ரவீனாவின் பெயர் இருக்கும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் போட்டியாளர்கள் உள்ளே ஆசையோடு இருந்த ஃப்ரீஸ் டாஸ்க்கை முடித்துவிட்டு இவர்கள் வெளியே போக இருப்பதால் அதுவும் தங்களுக்கு சந்தோஷம்தான் என்றும் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications