பிக் பாஸில் செம டுவிஸ்ட்.. பூர்ணிமாவை வெளியேற்றிய ரவீனா.. இப்படி ஒரு டாஸ்கை பார்க்கலையே!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 28ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் டிக்கெட் டூ பினாலேக்கான மூன்றாவது டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.

அதில் நேருக்கு நேராக இரண்டு போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்து, எதிரே இருப்பவர் டாஸ்கில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை தாங்களே முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Bigg Boss Tamil Season 7 December 27 promo 1 third task for Ticket to Finale

ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை தான் பெற்று வருகிறது. இணையத்திலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக சுவாரசியம் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால்தான் என்டர்டைன்மெண்ட் என்று தவறாக புரிந்து கொண்டு கன்னாபின்னாவென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த சீசன் இப்போது பத்து போட்டியாளர்களோடு இருக்கிறது. இதில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்திருந்தனர்.

Bigg Boss Tamil Season 7 December 27 promo 1 third task for Ticket to Finale

அதில் பலர் வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஒரு நாள் நன்றாக இருக்கும் போட்டியாளர்கள் அடுத்த நாளே ரசிகர்களை கடுப்பாகி விடுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு கேங்காக பிரிந்து போட்டியாளர்கள் ஒரு கேங்கை ஒரு கேங் மாறி மாறி தாக்கிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அங்கு சூழ்ச்சி செய்து குரூப் சேர்ந்து டாஸ்க் சரியாக முடிக்காமல் சொதப்பி வைத்து விடுவதும் வாடிக்கையாக இருக்கிறது

Bigg Boss Tamil Season 7 December 27 promo 1 third task for Ticket to Finale

அந்த மாதிரி தான் நேற்று நடந்த டாஸ்க்கில் கூட தங்களுக்கு கொடுக்கப்பட்ட கார்டில் நிக்சன் சுரண்டி பார்த்திருந்தார். அதுபோல எலிமினேஷன் என்கிற கார்டில் மட்டும் நெயில் பாலிஷ் வைத்து அதை அடையாளப்படுத்தி வைத்திருந்தனர். இதற்கு பிக் பாஸ் கடுமையாக எச்சரிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

அதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் டிக்கட் டூ பினாலே விற்கான மூன்றாவது டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது போட்டியாளர்கள் இருவர் நேருக்கு நேராக உட்கார்ந்து எதிரே இருக்கும் நபர் டாஸ்கில் தொடரலாமா இல்லையா என்று வாக்குவாதம் செய்கின்றனர்.

அதில் ரவீனா, பூர்ணிமா இந்த டாஸ்கை நீங்கள் ஜெயித்தாலும் ஜெயிக்கல என்றாலும் நீங்கள் விளையாட்டில் இருப்பீங்க என்று நினைக்கிறேன் என்று அவருக்க kill என்கிற கார்டை கொடுத்து டாஸ்கிலிருந்து வெளியேற்றி இருந்தார். அதை நேரத்தில் நிக்சன் மற்றும் மாயா இருவரும் நேருக்கு நேராக இருந்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோல தினேஷ் மற்றும் விசித்திரா இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர். அதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+