பிக் பாஸ் 7 கிராண்ட் பினாலே மேடையிலும் குறையாத வன்மம்.. கூல் சுரேஷ் பேசும்போது விசித்ரா செய்த வேலை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியே வந்த போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு உங்களுடைய வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கூல் சுரேஷ் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கூல் சுரேஷ் பேச்சைக் கேட்டு அவருக்கு பின்னாடி நேராக அமைந்திருந்த விசித்திரா தன்னுடைய முகத்தை அலட்சியம் செய்கிற மாதிரி முகப்பாவனை செய்ய அதை கேமரா பண்ணி வெளிகாட்டி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கிராண்ட் பினாலே மேடையிலும் கூட உங்களுடைய வன்மம் குறையவில்லையா? என்று கலாய்த்து வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று இறுதி கட்டத்தை எட்டி கிராண்ட் பினாலே மேடை வரைக்கும் வந்திருக்கிறது. இதில் இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து உள்ளே போட்டியாளர்களுக்குள் வன்மம் நிறைந்துதான் காணப்பட்டது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணியாக சேர்ந்து கொண்டு ஒரு அணியை தாக்கி இன்னொரு அணியினர் வாக்குவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அடிக்கடி காண முடியும்.
இந்த வீட்டிற்குள் எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் இவர்களுக்குள் இருந்த போட்டி பொறாமையை மட்டும் மாற்றவே முடியாது என்று சொல்ற மாதிரிதான் முதல் நாளில் தொடங்கி கடைசி நாள் வரைக்கும் இருந்தது. ஆனால் இது கடைசி நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்லாமல் இன்று பிக் பாஸ் இறுதி கிராண்ட் பினாலே மேடையிலும் கூட வெடித்திருக்கிறது.
அதாவது இன்று கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கமல்ஹாசன் ஏற்கனவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே போன போட்டியாளர்களிடம் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது? உங்களுக்கு வரவேற்பு எப்படி கிடைக்கிறது? என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது கூல் சுரேஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூல் சுரேஷ் பேசுவதில் எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பெல்லாம் மக்கள் வெளியே பார்க்கும்போது தல என்றும் அண்ணே என்றும் கத்தி கூப்பிடுவார்கள். ஆனால் இப்போ எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே போனால் காரில் போகும் 50 வயது மக்கள் கூட நின்று தம்பி ஒரு போட்டோ எடுப்போமா என்று கேட்கிறார்கள்.
இப்படி ஒரு மரியாதை எனக்கு வேற மாதிரி இருக்கிறது. நான் இதுக்கு முன்னாடி எல்லாம் தியேட்டரில் கத்துவதை பார்த்து என்னை கோபக்காரன் என்று பலர் தப்பா நினைச்சு இருக்காங்க. ஆனா இப்போ என்னுடைய கேரக்டரை பார்த்து என்னிடம் பலர் பேசுறாங்க. அதிலும் என்னிடம் குடும்பத்திலேயே சண்டை போட்டிருந்த ரெண்டு மூணு பேரு கூட நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்கு போகும்போது என் வீட்டுக்கே வந்துட்டாங்க.
அவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க அவருக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்த விசித்திரா தன்னுடைய முகத்தை கோபமாகவும், அலட்சியமாகவும் கூல் சுரேஷ் பேசுவதை கேட்டு மாற்றிக் கொண்டு இருக்க அதை கேமரா சூம் செய்து காட்டி இருந்தது. இதை பார்க்கும் போது என்னதான் உங்களுக்குள்ள பிரச்சனை பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும்போது தான் நீங்க இப்படி ஆளாளுக்கு பண்ணிட்டு இருந்தீங்க அதுவும் கூல் சுரேஷ் எது பேசினாலும் விசித்திரா இப்படித்தான் பண்ணாங்க ஆனா இப்ப கூட இப்படியா பண்ணுவாங்க என்று ரசிகர்களின் மனதில் தோன்றியிருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications