ஒரு பெண்ணோட வாழ்க்கையை சீரழிச்சவன் தானே நீ? நிக்சன் பற்றி பிரதீப் சொன்னதற்கு காரணம் இதுவா?

Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பிரதீப் கடந்த சனிக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்

அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பிரதீப் நிக்சனிடம் நீ ஒரு பெண்ணோட வாழ்க்கையை சீரழிச்சவன் தானே என்று கூறியிருந்தார்.

bigg boss tamil season 7 Is this the reason Pradeep said about Nixon

இந்த நிலையில் அது குறித்து சில தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சில நாட்களாக இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து இரண்டு வீடு கான்செப்ட் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

அதே நேரத்தில் இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் என்பதால் அது பற்றி பலரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே படிப்பு குறித்த பிரச்சனை தொடங்கியது. அதைத் தொடர்ந்து இப்போது பிரதீப் அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி சில தினங்களாக பிரதீப்புடைய பெயர் தான் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களில் அதிகமான வரவேற்பும் ஆதரவும் பெற்று இருந்தது பிரதீப் தான். ஆனால் அவர் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி கெட்ட வார்த்தை பேசுகிறார். போட்டியாளர்களை மிரட்டுகிறார் என்ற ஒரு சில குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கத்தான் செய்தது.

ஆனாலும் கடந்த சனிக்கிழமை எபிசோட்டில் அவர் மீது ஒரு சில போட்டியாளர்கள் குரூப்பாக அவர் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.அதில் வீட்டிற்குள் எல்லோரும் ஒரே பாத்ரூம்மை பயன்படுத்தும் நிலையில் பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை லாக் செய்யாமல்
யூஸ் பண்ணுகிறார் என்று நிக்சன் கூறியிருந்தார்.

இது பெண்கள் இருக்கிற இடத்தில் அவர்களை அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் நிக்சனிடம் நீ எல்லாம் வாய் பேசாத, நீ ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்தவன் தான்டா என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் அப்படி என்னதான் நடந்து இருக்கும் என்று கேள்விகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் ஏற்கனவே நிக்சன் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே ஐசுவோடு நெருக்கமாக இருந்து வருகிறாகிறார். அதோடு சில தினங்களுக்கு முன்பு ஐசுவும் நிக்சனும் கண்ணாடியில் முத்தம் கொடுத்து இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது.

அதைத்தொடர்ந்து ஐசுவின் பெற்றோர் பிக்பாஸ் செட்டுக்கு சென்று எங்களுடைய குடும்ப மானம் போகிறது ஐசுவை வெளியே அனுப்புங்க என்று கேட்டதாக சில செய்திகள் பரவி வருகிறது. அப்போது பிக் பாஸ் தரப்பில் இருந்து நாங்கள் இப்போது அனுப்ப முடியாது என்று கூறிவிட்டதாகவும் இந்த தகவல் வீட்டுக்குள்ளே தெரிய வந்திருக்குமோ அதனால் தான் பிரதீப் இப்படியே நிக்சனை பேசிவிட்டு வந்திருந்தாரா? என்ற கேள்விகளும் வழக்கம்போல நெட்டிசன்களால் உருட்டப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+