பிக் பாஸ்க்குள் மீண்டும் ஜோவிகா.. மாயா, தினேஷிடம் கேட்ட நறுக் கேள்வி! வெடித்த பிரச்சனை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 11ம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோவிகா வந்து இருக்கிறார். அவர் மாயா மற்றும் தினேஷிடம் வெளியே நடக்கும் நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொண்டு எலிமினேஷன் ஆகி வெளியே போயிருந்த போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் கிராண்ட் பினாலே பங்ஷனை சிறப்பாக கொண்டாடுவதற்காக வந்த போட்டியாளர்களால் வீட்டிற்குள் இருக்கும் ஐந்து போட்டியாளர்களுக்குள் புது பிரச்சனை ஏற்படுகிறது.
ஏற்கனவே வருகிற போட்டியாளர்கள் எல்லாருமே மாயா குரூப் உடன் சேர்ந்து கொள்வதை பார்த்து தினேஷ், விஷ்ணு, மணி குரூப் புலம்பி கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் இன்று ஜோவிகா வந்ததும் தினேஷிடம் தனியாக பேசி அவருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதோடு தனக்கு மாயா மீது இருந்த கோபத்தையும் மாயாவிடம் நேரடியாக காட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. அதாவது வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த சீசனின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் எல்லோரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஜோவிகா வீட்டிற்குள் வந்திருக்கிறார். ஏற்கனவே ஜோவிகாவின் வருகையை தினேஷ் குரூப் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தனர். உள்ளே வரும் எல்லா போட்டியாளர்களுமே மாயா குரூப்போடு சேர்ந்து கொள்கிறார்கள். நமக்கு வெளியே என்ன மாதிரி நிலைமை இருக்கிறது என்பதை சொல்வதற்காக ஏதாவது விமர்சகர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று தினேஷ் சொல்லி இருந்தார்.
அதோடு வனிதா அக்கா வந்தா நல்லா இருக்கும் அல்லது ஜோவிகா கூட வந்தாலும் நல்லா இருக்குமே என்று சொல்லி இருந்த நிலையில் அவர்கள் எதிர்பார்த்தபடி இன்று ஜோவிகா வந்திருக்கிறார். ஆனால் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்யும் வனிதா இது குறித்து தினேஷை சாடி இருந்தார். அதாவது இன்னும் நிகழ்ச்சி முடிய இரண்டு நாள் தான் இருக்கு அதுக்குள்ள விமர்சகர் சொல்வதைக் கேட்டு இவங்க என்னத்த மாத்திக்க போறாங்கன்னு தெரியலையே?
எதற்காக இந்த நாடகம் போடுறாங்க என்று கேள்வி கேட்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஜோவிகா தினேஷிடம் நீங்க ஒரு இண்டிவிஜுவல் பிளேயர் என்றால் அது இல்ல.. உங்களை பாக்குறதுக்கு இண்டிவிஜுவல் பிளேயரா தெரியவே இல்லை. இது கூட்டு கேம் மாதிரி தான் தெரியுது. தினேஷை பற்றி தனியா பேசுறதுக்கு எதுவுமே நடக்கலையே என்று சொல்ல, அதற்கு தினேஷின் முகம் மாறி போய் இருக்கிறது
அதைத்தொடர்ந்து மாயாவிடம் ஜோவிகா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உங்க மேல எனக்கு ரொம்ப கோவம்... ஏன்னா எங்க எல்லாரையுமே அர்ச்சனா என்ன எல்லாம் பேசினாங்க? நீங்க என்னன்னா அவங்க கூட சோபால கட்டி புடிச்சு புரண்டுகிட்டு இருக்கீங்க. சத்தியமா சொல்றன் மாயா நீங்க இந்த சீசன்ல இல்லனா இந்த சீசனே வேஸ்ட் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்குள் வன்மம் மட்டும்தான் பகைஞ்சிகிட்டு இருக்கிறது என்று அனைவரும் திட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்போது உள்ளே வரும் போட்டியாளர்களும் வன்மத்தை தான் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இருக்கிற ரெண்டு நாளைக்குள்ள இவர்கள் இம்சை தாங்கல, யாரு தான் டைட்டில் வின் பண்ணுவாங்கன்னு தெரியல. ஆனா அதுக்கு முன்னாடி உள்ள இருக்கிறவங்க அவங்களோட இமேஜை மக்கள் முன்னாடி கெடுத்துக்குவாங்கன்னு தெரியுது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications