பிக் பாஸ் 7: வந்தது பணப்பெட்டி.. வீட்டை விட்டு கிளம்பும் முக்கிய போட்டியாளர்.. விசித்திரா சொன்ன அந்த வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி இரண்டாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பணப்பெட்டி டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தோடு டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
இதில் பணத்தை யார் எடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தினேஷ் எதிர்பாராத பதிலை சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 90 நாட்களைக் கடந்து இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் என்று யூகிக்க முடியாத வகையில் தான் ரசிகர்கள் இருக்கின்றனர். காரணம் போட்டியாளர்கள் ஒரு நாள் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கிறார்கள் மறுநாளே தங்களுடைய செயலால் ரசிகர்களை அதிருப்தியாக்கி விடுகிறார்கள்.
கண்டெண்டுக்காக விளையாடுகிறோம் என்று பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகளில் மட்டும்தான் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி என்டர்டைன்மென்ட் செய்யவில்லை என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. இதுவரைக்கும் உள்ள சீசனில் ஆரம்பத்திலேயே இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் முத்திரை குத்தி விடுவார்கள்.
கடைசி நேரத்தில் அது நடக்காமல் போன கதையும் உண்டு... ஆனால் கடைசி வரைக்கும் ஒரு சில போட்டியாளர்களுக்கு குறிப்பிட்டு ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவதை பார்க்க முடியும். ஆனால் இந்த சீசனில் அந்த மாதிரி இல்லை. எப்படியோ கடந்த 90 நாட்களை இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கடந்துவிட்டனர். இப்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர்.
அவர்களில் ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்று பணப்பெட்டி டாஸ்க் தொடங்கி இருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் முக்கியமானதாக இருக்கும். அந்த மாதிரி இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆரம்பத்தில் ஒரு லட்சம் பணத்தோடு தொடங்கி இருக்கிறது.
அதே ப்ரோமோவில் 5 லட்சம் வரைக்கும் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் பணபெட்டியை பார்த்ததும் தினேஷ் இப்போ ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது இன்னும் கூட ஒரு ஜீரோ சேர்ந்தால் நான் அதை எடுத்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகு கிச்சனில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது விசித்திரா யாரையாவது பணத்தை எடுத்துட்டு வெளியே போங்க என்று எப்போதும் போல டீச்சர அம்மா போல பேச அதற்கு தினேஷ் இந்த சீசனில் யாரும் பணப்பெட்டியை எடுக்க மாட்டாங்க என்று உறுதியாக சொல்கிறார்.
அதே நேரத்தில் இந்த சீசனில் தினேஷ் மற்றும் அர்ச்சனா எப்படியும் பணப்பெட்டியை எடுக்க மாட்டார்கள். ஏற்கனவே விளையாட்டின் போக்கை தெரிந்து கொண்டு உள்ளே இவர்கள் போயிருப்பதால்... ஆனால் மணி அல்லது பூர்ணிமா பணப்பெட்டியை எடுப்பதற்கு தான் அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதுபோல மாயாவும் பணப்பெட்டிக்காக அதிகமாக வாதாடுவார். ஆனாலும் கடைசி நேரத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications