பிக் பாஸ் 7: தொடங்கியது புது பிரச்சனை.. வீட்டுக்குள் வந்த விக்ரம் சொன்ன வார்த்தை.. இறுதியில் டுவிஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன்7 நிகழ்ச்சியில் ஜனவரி பத்தாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் இறுதி வர கிராண்ட் பினாலே கொண்டாடுவதற்காக வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று அக்ஷயா, அனன்யா, வினுஷா தேவி என மூன்று போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். அதை தொடர்ந்து இன்று முதல் ப்ரோமோவில் விக்ரம் வந்திருக்கிறார்.
அவர் ஏற்கனவே மாயா குரூப்பால் பட்ட அவமானங்கள் போதாது என்று இப்போது மீண்டும் வீட்டிற்குள் வந்து மாயா குரூப்புக்கு ஆதரவாக பேசி ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை பெற்று இருக்கிறார். மீண்டும் சரியாக தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்று பலரும் திட்டி வருகின்றனர். அப்படி என்னதான் நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 101 வது நாள் தொடங்கி இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 14ஆம் தேதி பிரம்மாண்டமாக மாலை 6:00 மணிக்கு இந்த சீசனில் கிராண்ட் பினாலே நடைபெற இருக்கிறது.
இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் கடைசி வாரம் என்பதால் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் முதல் நாளான நேற்று நூறாவது நாளை கொண்டாடும் விதத்தில் முதலில் அனன்யாவும் அதைத்தொடர்ந்து அட்சயாவும் பிறகு நூறாவது நாள் செலிப்ரேஷன் என்று இனிப்புகளோடு வினுஷா தேவி மீண்டும் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
வினுஷா வந்ததும் தினேஷ் விஷ்ணுவிடம் சகஜமாக பேசிய வினுஷா நிக்சன் பற்றி அர்ச்சனாவிடம் கேள்வி கேட்டு அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். இப்படியான நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் விக்ரம் உள்ளே வருகிறார். அவர் உள்ளே வந்ததும் நேராக மாயா டீம் கூட தான் போய் பேசுகிறார். அதில் நான் வெளியே போய் பார்த்தா எல்லாமே வேற மாதிரி இருக்கு.
மக்கள் பாக்குறது வேற மாதிரி தான் இருக்கு, மணி நம்ம கூடவே இருந்து ஒவ்வொரு பிரச்சனையிலும் என்னை ஏத்தி விட்டு இருக்கான் என்று குத்தி காட்டி சொல்லிக் கொண்டிருக்கிறார்.. மறுபக்கத்தில் விஷ்ணு கூல் சுரேஷ் வீட்டுக்கு வந்தால் ஜாலியா இருக்கும் இவங்க எங்க கூட பேச போறாங்க இவங்க எல்லாரும் ஒரே குரூப்பா தானே என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு விக்ரம் டைட்டில் வின்னர் என்றாலே விக்ரம் பெயர்தான் வருது.
இது கப்பு வாங்கினால் என்ன வாங்காட்டி என்ன இதுவே எனக்கு போதும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஐசு பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நிக்சன் எந்தந்த சீசனில் இனி வருவது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உள்ளே நிக்சன் வந்தால் தான் நிகழ்ச்சிக்கு டிஆர்பி அதிகரிக்கும் என்பதும் உண்மைதான். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications