பிக் பாஸ் 7 லைவ்: தலைவரான மணி.. மாயாவிற்கு கிடைத்த அவமானம்.. பிரிந்த கூட்டணி.. வெளியேறுபவர் இவரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக மணி சந்திரா தேர்வாகி இருக்கிறார்.
அதே நேரத்தில் மணியை அவமானப்படுத்திய மாயாவை ரவீனா அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மணி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த குரூப்பை உடைத்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இந்த வார தலைவர் பதவிக்காக மாயா, மணி மற்றும் விஜய் மூவரும் தேர்வாகி இருந்தனர். அதில் இன்று நடந்த டாஸ்க்கில் மணி வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்வாகி இருக்கிறார். டாஸ்க் முடிவடைந்ததும் மாயா மணியிடம் மணி எப்படித்தான் இந்த டாஸ்க்கை கம்ப்ளீட் பண்ணுனான்னு தெரியல, அங்கு கொடுக்கப்பட்டிருந்த பலகையில் நிற்கவே கஷ்டமாக இருந்தது.
எப்படியோ மணிக்கு லக்கு இருந்திருக்கு. அதனால மணி வெற்றி பெற்று விட்டான் என்று சொல்லி இருக்கிறார். அப்போது அருகில் இருந்த ரவீனா அது என்ன நீங்க ஜெயிச்சா மட்டும் அது கஷ்டப்பட்டு விளையாடியது. ஆனால் அடுத்தவங்க ஜெயிச்சா அது லக்கால் கிடைத்தது தானா? இது எந்த வகையில் நியாயம்? என்று கேட்க அதற்கு மாயா மழுப்பும் வகையில் மணியிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அதைத்தொடர்ந்து இன்று பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு போட்டியாளர்களை பிரிப்பதற்காக பிக் பாஸ் மணியிடம் சொல்லி இருந்தார். மணி இரண்டு மூன்று முறை யோசித்து பிறகு ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் விசித்திரா, கூல் சுரேஷ், ரவீனா, தினேஷ், சரவண விக்ரம், மாயா என ஆறு பேரை அனுப்பி வைத்திருக்கிறார்.
மாயா மற்றும் பூர்ணிமாவை இந்த வாரமும் பிரித்து வைத்திருக்கின்றனர். அதுபோல அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ் கூட்டணியும் இப்போது உடைபட்டு இருக்கிறது. இதனால் இந்த வாரத்தில் இனி யார் எப்படி மாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதுபோல ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் எப்படியும் விசித்திரா, மாயா, சரவண விக்ரம் போன்றோர் ஒரே குரூப்பாக சேர்ந்து விடுவார்கள்.
அதுபோல தினேஷ், கூல் சுரேஷ் இருவரும் குரூப்பாக இருப்பார்கள். எப்போதும் போல ரவீனா இந்த பக்கமும் இல்லாமல் அந்தப் பக்கமும் இல்லாமல் இரண்டு பக்கமும் கமெண்ட் பாஸ் பண்ணிட்டு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல இந்த வாரத்தில் அனன்யா, அர்ச்சனா, தினேஷ், நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு என 6 போட்டியாளர்கள் நாமினேசன் ஆகியிருக்கின்றனர்.

இதில் யாரு வெளியேறப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் நேற்று மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாட்களாக கமல்ஹாசன் விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மணி முதலியோரை ரோஸ்ட் செய்து இருந்த நிலையில் நின்று முழுக்க விஷ்ணு நான் வெளியே போய் விடுகிறேன் என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருக்கிறார். அதுபோல அர்ச்சனாவும் நான் இப்போ வெளியே போக சொன்னாலும் வெளியே போய் ஜாலியா இருப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications