பிக் பாஸ் 7: அவ வீட்டுக்கு வரக்கூடாது.. சர்ச்சைகளால் பொங்கி எழுந்த பூர்ணிமாவின் அம்மா.. காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்களுக்கு அளவுக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்களும் வலம் வருகிறது.

இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்று தற்போதைய ப்ரோமோவிலும் கமலிடம் அதிகமாக திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் பூர்ணிமாவின் அம்மா பூர்ணிமா குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

bigg boss tamil season 7 Poornima mother who has been getting negative comments

ஏற்கனவே பூர்ணிமா விளையாட்டு குறித்து அவருடைய அம்மா பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் முற்றிலும் வித்தியாசமாக முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் மக்கள் மத்தியில் வரவேற்பையும், கடுப்பையும் சமமான அளவில் பெற்று வருகிறது. இந்த சீசனை பார்த்து பதறிப் போன பல நெட்டிசன்கள் கூட இதற்கு முந்தைய சீசன்கள் பெஸ்ட் சீசன் என்றும், இந்த சீசன் தான் வொர்த் சீசன் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

பிக் பாஸ் 7: வேஷம் கலைந்து விட்டது.. உள்ளே நடந்தது இதுதான்.. மிரட்டிய கமல்ஹாசன்.. அப்போ அவ்வளவுதானா?
அது மட்டும் அல்லாமல் இந்த சீசன் மூலம் தான் கமல்ஹாசனையும் அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள். கமலை இந்த அளவிற்கு ரசிகர்கள் ட்ரோல் செய்வதற்கு காரணம் பூர்ணிமாவும் மாயாவுதான். பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் இருந்தே தனியாக அமர்ந்து புரணி பேசிக் கொண்டிருந்தனர்.

இதனால் இவர்களுக்கு அதிகமாக குளோசப் வைக்கப்பட்டு இவர்களுடைய செயல்பாடுகள் ரசிகர்களின் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டன. அதிலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை இவர்கள் புல்லி கேங்காக சேர்ந்து பேசும் முறை சில சமயங்களில் பார்க்கும் ரசிகர்களை கடுப்பேற்றியது. அதுபோல கமல் குறித்தும் அதிகமான முறை பூர்ணிமா மற்றும் மாயா பேசியிருக்கிறார்.

அதிலும் கமல்ஹாசனை பூர்ணிமா குடிகார அங்கில் என்றும் விமர்சித்து இருந்தார். 24 மணி நேர எபிசோடில் பூர்ணிமா பல இடங்களில் கமல்ஹாசனை திட்டி இருக்கிறார். இதனால் இவர் மீது ரசிகர்களுக்கு அதிகமான கோபத்தில் இருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் இவர்களுக்கு ஆதரவாகவே பேசிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் 7: பூர்ணிமாவை அப்படி மிரட்டிய கமல்.. ஆனால் இதை மறந்து விட்டாரே? நெட்டிசன்கள் கேள்வி
ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன் நீங்க யார் காதில் பூ சுத்துறீங்க? நான் என்ன கேள்வி கேட்டாலும் நீங்கள் என்னை ஏமாற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டிருந்தார். இந்த நிலையில் பூர்ணிமாவின் அம்மா பூர்ணிமா குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் பூர்ணிமாவை பற்றி பல நெகடிவ் கமெண்ட்கள் வந்தன.

ஆனால் இந்த நெகட்டிவோடு அவ வீட்டுக்கு வரக்கூடாது என்று நான் நினைத்தேன். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் போகும் போது கூட முதலில் நான் வேண்டாம் என்றுதான் தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. அவளோடு சேர்ந்து அவளுடைய அப்பாவும் அவளுக்கு சப்போர்ட்டாக இருந்து பேசியதால்தான் அனுப்பி வைத்தேன். ஆனால் இப்போது பூர்ணிமா சரியாகத்தான் விளையாடி வருகிறார் பொருத்திருந்து பார்ப்போம் என்று பூர்ணிமாவின் அம்மா கூறி இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் டான்ஸ் மராத்தான் டாஸ்க்கில் பூர்ணிமா முத்தழகுவாக மாறி இருந்தார். அதுபோல மாயாவோடு நேருக்கு நேராக மோதவும் தொடங்கியிருந்தார். தன்னுடைய கருத்தை தைரியமாக பூர்ணிமா எடுத்து வைக்க தொடங்கியிருந்த நேரத்தில் கமல்ஹாசன் பூர்ணிமாவை திட்டி இருக்கிறார்.

ஆனால் இப்போது ரசிகர்களின் மத்தியில் பூர்ணிமாவுக்கு வரவேற்பு கிடைக்க தொடங்கி இருக்கிறது. அதனால் பூர்ணிமாவின் அம்மா ஆசைப்பட்ட மாதிரி அவர் தன்னுடைய நெகட்டிவ் இமேஜை துடைத்துவிட்டு வீட்டிற்கு போகப் போகிறாரா? அல்லது இருப்பதையும் கெடுத்துக் கொண்டு வெளியே வரப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+