பிக் பாஸில் பூர்ணிமாவுக்கு கிடைத்தது 16 லட்சம் மட்டும் இல்ல! மொத்தம் எத்தனை லட்சம் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து நேற்று பூர்ணிமா 16 லட்சம் பணத்தை பணப்பெட்டி டாஸ்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறி இருந்தார். ஆனால் அவருக்கு 16 லட்சம் மட்டும் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் 94 நாட்கள் இருந்ததற்கும் சேர்த்து அவருக்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பணம் கிடைத்திருக்கிறது.
அதிலும் பூர்ணிமா பெற்ற மொத்த பணத்தின் அளவு இந்த சீசனின் டைட்டில் வின்னருக்கு இணையாக கிடைத்திருக்கிறது என்பது பலருக்கும் அதிர்ச்சி தான். அதேபோல இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத அளவில் பூர்ணிமாவுக்கு தான் அதிகப்படியான பணம் கிடைத்திருக்கிறது.
டைட்டில் ஜெயித்து கிடைக்கும் படத்திற்கு இணையாக பூர்ணிமா டைட்டிலை ஜெயிக்காமலே செமையாக யோசித்து பணப்பெட்டியை தூக்கி மேலும் அதிகப்படியான பணத்தோடு வெளியே வந்து இருக்கும் பூர்ணிமாவுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது..

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடி பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சத்தை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ஸ்மார்ட் ஆக வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணிமா 94 நாட்கள் இருந்த நிலையில் அவருடைய மொத்த சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமாவுக்கு ஒரு நாள் சம்பளமாக 15,000 பேசப்பட்டு இருக்கிறதாம். அதிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் 94 நாட்கள் இவர் இருந்திருக்கிறாங்க.
அதனால் அவருக்கு மொத்தமாக 14 லட்சம் சம்பளமாக கிடைத்திருக்கிறது. அதோடு பூர்ணிமா 16 லட்சம் பணப்பெட்டியும் எடுத்து இருக்கிறாங்க. அதனால் அவருக்கு 30 லட்சம் சம்பாதித்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் வெற்றியாளராக வருபவருக்கு ஒவ்வொரு முறையும் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் அதோடு சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிறுவனங்களும் அவருக்கு பணம் கொடுப்பார்கள்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக வருபவருக்கு கூட பூர்ணிமாவுக்கு கிடைத்த பணம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு சில டாஸ்க்களில் ஜெயித்த பூர்ணிமாவுக்கு சில கம்பெனியின் பொருள்களும் கிடைத்திருந்தது. அதோடு இந்த சீசனில் அதிகமான பணத்தோடு வெளியேறிய ஒரே போட்டியாளர் என்றால் அது பூர்ணிமா தான்.

அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போட்டியாளர்கள் யாருக்கும் பூர்ணிமா அளவிற்கு பணம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பூர்ணிமா பணப்பெட்டியில் இருந்த 16 லட்சம் ரூபாய் பணத்தை தூக்கும்போதே மாயா இந்த பணத்தில் பாதி எனக்கு தந்துவிட வேண்டும் என்று அக்ரீமெண்ட் போட்டு இருந்தார். அதன்படி தான் சம்பாதித்த பணத்தில் பூர்ணிமா மாயாவிற்கு கொடுக்கப் போகிறாரா? அல்லது மொத்த பணமும் அவருக்கு தானா? என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications