பிக் பாஸ் 7: பிஆர் டீம் பற்றி பேசி மாட்டிக்கொண்ட மூன்று போட்டியாளர்கள்.. அம்மாடி இத்தனை லட்சங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் நேற்றைய நாளில் போட்டியாளர்கள் சில ரகசியங்களை வெளிப்படையாக பேசி பலரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றனர்.
சீசனில் பிஆர் டீம் உதவியோடு குறிப்பிட்ட ஒரு போட்டியாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்து வருவதாக செய்திகள் இணையத்தில் பரவி வந்தது.
இந்த நிலையில் இந்த சீசன் இன்னும் கலந்து கொண்ட மூன்று முக்கிய போட்டியாளர்கள் தங்களிடமும் பிஆர்டி பேரம் பேசினார்கள் என்பது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கின்றனர்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பெரிய அளவில் சண்டை சச்சரவுகளோடு இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பழைய சீசன்களை காட்டிலும் சுவாரசியம் குறைவாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பு இப்போது இந்த சீசனுக்கு இல்லை என்று பலர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் உள்ளே இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் இதுவரைக்கும் அவர்களைப் பார்த்த முகமும் இப்போது வீட்டிற்குள்ளே கண்டன்ட் கொடுக்கிறேன் என்கிற பெயரில் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருவதும் தான் வாடிக்கையாக இருக்கிறது.
இதனால் பலர் இந்த நிகழ்ச்சி மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த உரையாடல் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது நேற்று பிரதீப், விசித்ரா, தினேஷ் மூவரும் பேசி கொண்டு இருந்திருக்கின்றனர். அதில் பிரதீப் விஷ்ணு வெளியே ஆள் செட் பண்ணி வைத்து விளையாடுவது போல தோன்றுகிறது.
இங்கே வந்தால் 50 லட்சம் கிடைக்கும் அதில் ஒரு பத்து லட்சத்தை செலவு பண்ணி ஆட்களை தயார் செய்து வைத்திருப்பான் போல, அவர்களை வைத்து அவர்கள் அவனுக்கேற்ற வகையில் மீம்ஸ் வீடியோக்களை தயார் செய்து போட சொல்லி இருப்பான் என்று எனக்கு தோன்றுகிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட விசித்திரா ஆமா அர்ச்சனா உள்ள வந்ததும் அதுதான் சொன்னா,
கவின் கன்னத்தில் அப்போ அடிச்ச காரணமே இதுதான்.. ரகசியத்தை உளறிய பிரதீப்.. அதிர்ச்சி அடைய வைத்த காரணம்
விஷ்ணுவை பற்றி போஸ்டர்கள் தினமும் இணையத்தில் வந்து கொண்டிருப்பதாக அவர் சொன்னா என்று விசித்திரா கூறுகிறார். அப்போது தினேஷ் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவது தெரிந்ததும் ஒரு சிலர் எனக்கு டிஎம் செய்து என்னிடம் உங்களை ஜெயிக்க வைக்கிறோம் என்று பணம் கேட்டார்கள். நாங்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம் என்றும் சொன்னார்கள் என்று கூறுகிறார்.
அதோடு நான் ஏற்கனவே பிக் பாஸ்க்கு வருகிறேன் என்று செய்தி வைரலான போது என்னிடம் பேசினார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்த வீடியோவில் கடைசியாக பிரதீப் என்னத்த பணம் கொடுத்தாலும் நாம் எப்படி விளையாடுறோம்னு மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
இப்போ நன்கு விளையாடினால் விஷ்ணு ஓட்டோடு சேர்ந்து என் ஓட்டும் எனக்கு வந்து சேரத்தான் செய்யும் என்று கூறுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இத்தனை தில்லாலங்கடி வேலை நடக்கிறதா? அப்போ எல்லோரும் சொல்வது எல்லாம் உண்மைதானா? என்று அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications