Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அர்ச்சனாவுக்கு சப்போர்ட் பண்ற மக்கள் "ஸ்டுப்பிட்.." கத்திய ஜோவிகா.. உருக்கமாக முடிவு போட்ட வனிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஜோவிகா நேற்று அர்ச்சனா மீது இருக்கும் கோபத்தில் ரசிகர்களை திட்டி இருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

அர்ச்சனா மற்றும் விஷ்ணுவுக்கு இடையே நடந்த சண்டையின்போது ஜோவிகா விஷ்ணுவுக்கு ஆதரவாக அர்ச்சனாவிற்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்களையும் திட்டியிருக்கிறார்.

bigg boss tamil season 7 The people who supported Archana are stupid Jovika shouted

அதே நேரத்தில் வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் போன பிக் நிகழ்ச்சியில் தற்போது ஏழாவது சீசன் நடந்து வருகிறது. இதில் வழக்கமான சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. ஆரம்பமான முதல் வார்த்தையிலேயே ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே படிப்பு விஷயத்தில் பெரிய பிரச்சனை வெடித்தது.

bigg boss tamil season 7 The people who supported Archana are stupid Jovika shouted

அதைத் தொடர்ந்து பிரதீப்புடைய வெளியேற்றமும் சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் பார்க்காத ரசிகர்களையும் விவாதிக்க வைத்தது. இப்படியான நிலையில் வைல்ட் கார்ட் என்டிரியாக உள்ளே வந்து அர்ச்சனாவுக்கு ரசிகர்களின் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இதை உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலர் புரிந்து கொள்ளாமல் அர்ச்சனாவிடம் வீண் வாதம் செய்து கொண்டிருக்கின்றனர்.

என்னை அப்படி தொட்டுட்டாரு.. தினேஷை குற்றம் சாட்டும் மாயா.. உண்மையை அம்பலப்படுத்திய பிக் பாஸ்
அப்படித்தான் நேற்று விஷ்ணு மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே பிரச்சனை வெடித்துக் கொண்டே இருந்தது. கடந்த வார எபிசோட்டில் அர்ச்சனாவுக்கு விஷ்ணு தொட்டால் சிணுங்கி என்ற பட்டம் கொடுத்திருந்தார். அதிலிருந்து தொடங்கிய பிரச்சனை இன்று வரைக்கும் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. அதிலும் நேற்று விஷ்ணு அர்ச்சனாவிடம் அதிகமாக பேசி மீண்டும் அவரை அழ வைத்திருந்தார்.

அப்போது அர்ச்சனா அழுவதும் விஷ்ணு சக போட்டியாளர்களிடம் நீங்கள் எல்லாருமே ஒரு பெண் அழுதுவிட்டால் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்களா? ஒரு ஆள் தன்னுடைய கருத்தை தைரியமாக எடுத்துச் சொன்னால் அதில் இருக்கும் நியாயத்தை கேட்க மாட்டீர்களா என்று கேள்வி கேட்க அப்போது அங்கிருந்த ஜோவிகா விஷ்ணுவுக்கு ஆதரவாக நாங்கள் உனக்கு தான் சப்போர்ட் பண்ணுகிறோம்.

அர்ச்சனா எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு சப்போர்ட் பண்ணும் மக்கள் ஸ்டுப்பிட் என்று பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் நடிகை வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் தான் திறந்த புத்தகமாக இருக்கிறேன் உண்மையாகவும் இருக்கிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

பிக் பாஸ்7: இது என்ன தமிழுக்கு வந்த சோதனை.. ஜோவிகா எழுதிய வார்த்தை.. வனிதா கொடுத்த விளக்கம்
அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வரும் வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் நீங்க தோல்வியுற்றால் நம்பிக்கை ஒருபோதும் கைவிடாதீர்கள். ஏனென்றால் FAIL என்பதற்கு அர்த்தம் அது கற்றலில் முதல் பயிற்சி என்பதாகும். மேலும் முடிவு என்பது முதல் அல்ல அத்துடன் உங்களுக்கு NO என்று பதில் கிடைத்தால் அது அடுத்த கட்டத்திற்கான வாய்ப்பு என எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலையை மாற்றுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் ஜோவிகா இந்த வாரம் வெளியேறப் போகிறாரா? அதனால் தான் வனிதா மகளுக்காக இப்படி ஒரு ஆறுதல் பதிவு வெளியிட்டிருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+