TTF டாஸ்கை வென்றது யார் தெரியுமா? அதிரடியாக வெளியேற்றப்பட்ட நிக்சன்.. பிக் பாஸ் கொடுத்த க்ளூ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் இன்று மூன்றாவது டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.
அதில் யார் ஜெயித்து இருக்கிறார்கள் என்பது தற்போது வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் க்ளூ கொடுத்து இருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த டாஸ்க்கில் ஜெயித்து விட வேண்டும் என்று நேற்று நடந்த டாஸ்க்கில் ஏமாற்று வேலை செய்த நிக்சன் இன்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் இந்த நிகழ்ச்சியில் போட்டியின் வேகமும் அதிகரித்திருக்கிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் ஃப்ரிஸ் டாஸ்க் நடைபெற்று போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்தனர்.
அதைத் தொடர்ந்து இப்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் போட்டியாளர்கள் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டிகள் எளிமையாக இருக்கிறது என்பது பலருடைய கருத்தாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பந்து உருட்டும் டாஸ்க் இருந்த நிலையில் இப்போது இரண்டு டாஸ்க்களில் முயல் வைத்து கொடுக்கப்பட்டது.
இப்போது இன்று மூன்றாவது டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் போர்டில் அங்கு வைக்கப்பட்டிருக்கும் டிக்கெட் டூ பினாலே என்ற டிக்கெட் கீழே விழுந்து விடாமல் கையை அதில் வைத்து அதிக நேரம் தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதில் யார் அதிக நேரம் இருக்கிறார்களோ அவர்கள் தான் இந்த டாஸ்கின் வின்னர் என்று அறிவிக்கப்படுகிறது.
அந்த வின்னருக்கு 5 பாயிண்ட் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இதுவரைக்கும் நடைபெற்ற டாஸ்க்களில் அதிகமான பாயிண்ட் பெற்று விஷ்ணு தான் முதலிடத்தில் இருக்கிறார். அவரிடம் 7 பாயிண்ட் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் யார் யாருக்கு எவ்வளவு பாய்ண்ட் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பதை கடைசியில் காட்டி இருக்கிறார்கள்.

ஆனால் இதை புத்திசாலி ரசிகர்கள் இலகுவாக கண்டுபிடித்து விட்டார்கள். அதாவது அதில் இடம்பெற்றிருக்கும் படத்தில் முதலிடத்தில் ரவீனாவிற்கு 5 பாயிண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து மணிக்கு நான்கு பாய்ண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக விஷ்ணுவிற்கு மூன்று பாய்ண்டுகளும், தினேஷுக்கு இரண்டு பாய்ண்ட்டும் கடைசியாக மாயாவிற்கு ஒரு பாய்ண்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வரிசையில் இரண்டாவது வெளியான ப்ரோமோவில் நிக்சன் விளையாட்டுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதாவது தினேஷ் அணியினர் தான் இந்த டாஸ்க்கில் அதிக நேரம் போர்டில் கை வைத்து நின்று இருக்கின்றனர். அதே நேரத்தில் ஏற்கனவே ஏழு பாயிண்டுகள் பெற்று இருந்த விஷ்ணு இப்போது மூன்று பாயிண்டுகள் பெற்று மொத்தம் பத்து பாய்ண்டுகளோடு இந்த சீசன் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கை வெற்றி பெற்று இருக்கிறார்.

அவரை தொடர்ந்து ரவீனா 7 பாய்ண்டுகளும், மணிச்சந்திரா ஆறு பாய்ண்டுகளும் பெற்றிருக்கின்றனர் அவர்களைத் தொடர்ந்து மாயா, பூர்ணிமா, தினேஷ் மற்றும் நிக்ஸன் 4 பாயிண்டுகளும் விசித்திரா மூன்று பாயின்டுகளும் பெற்றிருக்கின்றனர். இதனால் நேரடியாக இனி பைனலுக்கு போகும் போட்டியாளராக விஷ்ணு தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனால் இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications