Bigg boss 7: பிரதீப் பெற்றோரின் மரணத்தை விமர்சித்த விஜய் வர்மா.. இணையத்தில் குவியும் கருத்துக்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் விளையாட்டு இப்போதுதான் வேகம் எடுத்து இருக்கிறது.
இந்த சீசன் ஆரம்பத்திலிருந்து சண்டை சச்சரவுகளோடு தொடங்கும் என்று நினைத்திருந்த நிலையில் அதே நேரத்தில் ஒரு பக்கம் கலகலப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப்பின் பெற்றோரின் மரணத்தை குறித்து நடிகர் விஜய் வர்மா விமர்சித்தது தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கத்தை விட இந்த சீசனில் அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தொடங்கியது வழக்கம்போல இந்த சீசனிலும் பல துறையில் இருந்து போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர்.
இதில் இந்த சீசனில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. இந்த சீசனில் அதிகமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் ஆரம்பத்திலேயே அடித்துக் கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

அதே நேரத்தில் இந்த முறை இரண்டு வீடு இருப்பதால் விளையாட்டு வெறித்தனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஒரு பக்கம் பெரிய வீடாகவும் இன்னொரு பக்கம் சின்ன வீடாகவும் இருக்கிறது. சின்ன வீட்டில் போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுவதாகவே. அங்கு தங்க வைக்கப்படுகின்றனர் ஆரம்பத்திலேயே ஆறு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த அடுத்தடுத்து போட்டியாளர்கள் அங்கே சேர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
வழக்கம்போல இந்த சீசனிலும் ஒரு சில பிரச்சனைகள் நடந்து கொண்டு வருகிறது. ஆனாலும் இது போதாது என்று நினைத்த பிக்பாஸ் வீட்டின் புதியது புதிதாக பிளான் போட்டு டாஸ்க்களை இறக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது எடை மேடை கொடுக்கப்படும் எடை அளவு வைக்கவில்லை என்றால் கொடுக்கப்பட்ட அளவு சாதனங்கள் பறிக்கப்படும் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் அந்த டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில ஆண் போட்டியாளர்கள் பெண்கள் மேக்கப் போடவில்லை என்றால் யார் பார்ப்பது என்று கமெண்ட் அடிக்க, அதனால் கோபமான பெண்கள் நாங்கள் மேக்கப்பில் இல்லாமல் ஒரு நாள் முழுக்க இருக்க போகிறோம் என்று தங்களுடைய மேக்கப்பை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது விஜய் வர்மா தன்னுடைய சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனியின் குடும்ப விஷயத்தை சொல்லி அவருடைய அம்மா அப்பா மரணத்தை வைத்து கிண்டல் செய்து இருக்கிறார். அதாவது அவங்க அம்மா, அப்பாவை கொளுத்துன மாதிரி உன்னையும் கொளுத்திட போறான் என்று நக்கல் அடித்தார்.

அதே நேரத்தில் குடும்ப பிரச்சனையால் பிரதீப் ஆண்டனியின் அப்பா அவருடைய அம்மாவை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை பண்ணிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதை சொல்லி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் விஜய் வர்மா கலாய்த்து இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications