ரவீனா அறுணாகயிறு பற்றி பிரதீப் இப்படித்தான் பேசினான்..யுகேந்திரன் ஓப்பன் அப்.. நல்லதுக்கு காலம் இல்ல
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப்பிற்கு ரெக் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது குறித்து இணையத்தில் அதிகமானோர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வெளியேற்றப்பட்ட யுகேந்திரன் பிரதீப்புக்கு ஆதரவாக சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு பிரதீப் மீது நடிகை ரவீனா தன்னுடைய அறுணாகயிறு பற்றி பேசினான் என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு அப்போது என்ன நடந்தது என்பது பற்றி யுகேந்திரன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி நேரத்தில் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் விவாதிக்கப்பட்டது. அதுவரைக்கும் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் வேறு ஒரு போட்டியாளர் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது இணையதளத்தில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருந்தது.
அதனாலேயே ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது ஏழாவது சீசன் தொடங்கியதும் ஆரம்பத்திலிருந்து இந்த சீசன் டைட்டில் வின்னராக பிரதீப் வருவார் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். காரணம் அவருடைய செயல்பாடுகள் டைட்டில் வின்னருக்கு தகுந்த மாதிரி இருக்கிறது என்று பலர் கூறி வந்தனர்.
உள்ளே இருக்கும் போட்டியாளர்களோடு சேர்ந்து இவரும் பல நேரங்களில் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார். ஆனாலும் மற்றவர்களை ஒப்பிடும்போது இவருடைய நடவடிக்கை பெரிய அளவில் மோசமாக இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சில போட்டியாளர்கள் செங்கோடி தூக்கி பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அதில் நடிகை ரவீனா கமல்ஹாசன் முன்பு பிரதீப் என்னுடைய அறுணாகயிறு வரைக்கும் பேசுரான் சார் என்று சொன்னார். மேற்கொண்டு அப்போது என்ன நடந்தது என்பதை ரவீனா சொல்ல வர அதை சொல்ல வேண்டாம் எங்களுக்கு புரிகிறது இதை நிறுத்தி விடுவோம் என்று கமல் ரவீனா பேச்சை நிறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த யுகேந்திரன் தற்போது பேட்டி ஒன்றில் இந்த சம்பவம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது பிரதீப் தப்பு பண்ணவன் தான். ஆனா உள்ளே இருக்கும் சிலர் சொல்ற மாதிரி அவனுடைய கேரக்டர் கிடையாது. பிரதீப் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறான்.
எல்லாரையும் போல இரட்டை அர்த்தத்தில் கிண்டல் செய்து இருக்கிறார். ஆனால் யாரையும் மனதில் இருந்து சென்றது கிடையாது. சிலர் அடுத்தவர்களை புண்படுத்த வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் பிரதீப் செய்யவில்லை. ரவீனா தன்னுடைய அருணாகயிறு பற்றி பிரதீப் பேசினார் என்று சொன்னார்.

இந்த சம்பவம் நடக்கும் போது அந்த இடத்தில் நானும் கூட தான் இருந்தேன். அப்போது ரவீனா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய அருணாக்கயிறு தெரிந்தது. அதை தான் சுட்டிக்காட்டி இதை பல பேர் பார்த்துகிட்டு இருக்காங்க. அதனால டிரஸ்ஸ சரியா போடு என்று பிரதீப் சொன்னான்.
அதை ரவீனா அந்த நேரத்தில் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கமல் முன்பு அதை ஒரு பெரிய விஷயமாக சொல்லி இருந்தார் என்று யுகேந்திரன் விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோவை பிரதீப் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications