பிக் பாஸுக்குள் நடக்கும் அக்கப்போரு.. யுகேந்திரன் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் மனதை குளிர வச்சுட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட யுகேந்திரன் வெளியே வந்த பிறகு முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடி வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது காதல் சர்ச்சைகளும் அடுத்தடுத்த பிரச்சனைகளில் போட்டியாளர்கள் அழுது கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்போது ரசிகர்களுக்கு நன்றி கூறி யுகேந்திரன் வெளியிட்ட வீடியோ இப்போது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
இவரை நடிகராகவே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இவர் எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார் என்ற ரகசியமும் வெளியே தெரிய இவருக்குள் இப்படி எல்லாம் ஒரு திறமை இருக்கிறதா? என்று பலர் வியந்து வந்தனர். ஆரம்பத்திலிருந்து இவர் இரண்டு வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்தாலே போதும் என்று இவருடைய மனைவியும் வெளியே பேட்டி கொடுத்து இருந்தார்.
அதுபோலவே தற்போது மூன்று வாரம் முடிவு அடைந்ததும் நான்காவது வாரத்தில் யுகேந்திரன் வெளியேறி இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனால் இது உண்மையான எவிக்ஷன் கிடையாது உள்ளே இவரை விட மோசமாக ஐசு, அக்ஷயா போன்றோர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் காதல் கண்டென்ட் கொடுத்து கொண்டிருப்பதால் அவர்களை விட்டு விட்டு இவரை தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ரசிகர்களை விடவும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்த விஜய் டிவி கூட மிச்சர் புகைப்படத்தை வைத்து bye bye என்று பிக் பாஸை டேக் செய்து பதிவு ஒன்று போட்டு இருந்தது.
இது கிரியேட்டிவ் சைடுல இருந்து வெளியானதாக இருந்தாலும் இந்த மாதிரி போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்து கேவலப்படுத்தலாமா? என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் யுகேந்திரன் வெளியே வரும் போது அதை பெரிய அளவில் பிரச்சனை ஆக்கி நடிக்காமல் சக போட்டியாளர்களிடம் எப்போதும் தான் பழகுவது போன்றே பேசிக் கொண்டு வெளியே வந்திருந்தார்.
அதுபோல வெளியே வந்ததும் அவர் தன்னுடைய instagram பக்கத்தில் "முடிந்தவரை முயற்சி செய்வோம்.. முடிவுகளை ஏற்றுக்கொள்வோம்" என்று தன்னுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதோடு இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தனக்காக ரசிகர்கள் வைத்த ஸ்டோரிகளையும் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில் இன்று புது வீடியோ ஒன்றை யுகேந்திரன் பகிர்ந்து இருக்கிறார். அதில் சங்கமம் திரைப்படத்தில் இடம்பெற்ற தடாக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் என்ற பாடலை பாடி நீங்கள் எனக்கு அளித்த அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய நன்றி என்று கூறி இருக்கிறார். அதோடு இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் நீங்கள் வெளியே வந்தது நல்லது தான் இல்லையேல் உள்ளே இருக்கும் சில விஷக்கிருமிகளால் உங்களுடைய பெயரையும் புகழையும் நீங்கள் இழக்க வேண்டியது ஆகி இருக்கும் என்று இவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அத்தோடு இவருடைய குரலில் பாட்டை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது என்றும் இதுபோல அடிக்கடி பாட்டு பாடி வீடியோ வெளியிடுங்கள் என்றும் பலர் வேண்டுகோள் வைத்தும் வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications