Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூர்ணிமா மற்றும் மாயாவை வறுத்தெடுத்த கமல்.. இதை கவனிச்சீங்களா? கடைசியில் பிக் பாஸ் வைத்த செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் விதி மீறல்கள் குறித்தும் தன்னை பற்றி உள்ளே பூர்ணிமா பேசி வருவது குறித்தும் நேற்று கமல்ஹாசன் பேசி இருப்பது தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

bigg boss tamil season 7Kamal Haasan indirectly retaliated against Poornima and Maya

அதிலும் நான் என்ன பேச வேண்டும், யாரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று எனக்கு யாரும் டயலாக்குகள் எழுதிக் கொடுக்க வேண்டாம் என்று பூர்ணிமாவை மறைமுகமாக கமல்ஹாசன் தாக்கி இருப்பது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து சண்டை சச்சரவுகள் அதிகமாக இருந்திருந்த நேரத்தில் இதுவரைக்கும் நடக்காத நிகழ்வு நேற்றைய எபிசோடில் நடந்திருந்தது. கமல்ஹாசன் சமீப காலமாகவே இந்த சீசனில் மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார். மாயா மற்றும் பூர்ணிமா அணியின் தலைவரே கமல்ஹாசன் தான் என்று அதிகமான மீம்ஸ்கள் பரவி வந்தது.


அதனால் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் பூர்ணிமா மற்றும் மாயாவை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி பரவும் மீம்ஸ்களுக்கும் கமல்ஹாசன் பதிலடி கொடுத்திருந்தார். பூர்ணிமா பல இடங்களில் பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது பிரபலமாக இருந்து வருகிறார் அதுவும் மாயாவோடு பூர்ணிமா விளையாடுவது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் 7: நிக்சனுக்கு டார்கெட் வைத்த மாயா, பூர்ணிமா.. பிக் பாஸ் வைத்த செக்.. அடுத்த வெளியேற்றமா?


இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசனை குடிகார அங்கிள் இந்த வாரம் என்ன பேச போகிறார் என்கிற தோனியில் பூர்ணிமா பேசி இருந்தார். அதோடு கமல்ஹாசன் பாரபட்சம் காட்டுகிறார். நான் தலைவராக இருக்கும்போது பாரபட்சம் காட்டினேன் என்று என்னை திட்டினார். ஆனால் தினேஷ் குறித்து இந்த வாரம் கமல்ஹாசன் என்ன பேசுகிறார் பார்ப்போம் என்று பேசி இருந்தார்.

அதற்கு கமல்ஹாசன் பூர்ணிமாவை மறைமுகமாக தாக்கும் வகையில் நேற்று எபிசோடு ஆரம்பத்திலேயே பேசி இருந்தார். உள்ளே யார் விமர்சனத்தை தாங்கி கொள்ளாதவராக இருக்கிறார் என்று கமல்ஹாசன் கேட்டிருந்தார். அப்படியே பேசிக் கொண்டிருக்கும்போது இப்போது எனக்கும் விமர்சனங்கள் வருகிறது.

விசித்திராவை தொடர்ந்து காதல் சரண்யா பகீர்.. எனக்கும் நடந்திருக்கு.. அந்த படத்தை மறக்க முடியாது


நான் விமர்சனங்களை தாண்டி தான் வந்து கொண்டிருக்கிறேன். நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். கலைஞனை தாக்கி அவர்களை அழித்து விட வேண்டும் என்ற விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளக்கம் கொடுத்து இருந்தார். அதோடு இங்க யாரும் என்னை இதைக் கேட்க வேண்டும் அதைக் கேட்க வேண்டும் என்று சொல்ல முடியாது.

கேட்கவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க? நீங்களும் இங்கே சம்பளம் வாங்குறீங்க, நானும் சம்பளம் வாங்குறேன். அதனால மரியாதை கொடுங்க. யாரும் இங்கு எனக்கு ஃபேவரைட் கிடையாது. நீங்க நான் என்ன சொல்லணும்னு எனக்கு டயலாக் எழுதி கொடுக்காதீங்க. டயலாக் எழுதுவதில் எனக்கு அனுபவம் இருக்கு,

ஆனா உங்களுக்கு யாருக்கும் உள்ளே அனுபவம் இருக்குதா? என்று கேட்டு அதோடு நான் இல்லாமல் ஒரு கண்டன்ட் உங்களால கிரியேட் பண்ண முடியுதான்னு முதல்ல பாருங்க. உங்க கேம்ல உங்களோட பார்ட்னர் நான் இல்ல, நான் ஆங்கர். உங்க கன்டண்டுக்கு வாக்கிங் ஸ்டிக்கா நான் இருக்க மாட்டேன். ஒருத்தர் தோளை பிடிச்சிட்டு நடங்க என்று ஆவேசமாக பேசி இருந்தார்.

மேலும் ஆடியன்ஸ் கிளப் பற்றி உங்களுடைய புரிதல் மிகவும் தவறாக இருக்கிறது என்று பேசி கொண்டிருந்தபோது கேமரா பூர்ணிமா மற்றும் மாயாவின் முகத்தை குளோசபை காட்டிக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் பேசி முடித்த பிறகு வெளியே வந்த பூர்ணிமா மாயாவிடம் எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று கதறி அழுது கொண்டிருந்தார். இதையும் கேமரா இவர்களை சூம் பண்ணி காட்டிக் கொண்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+