விசித்திராவை தொடர்ந்து காதல் சரண்யா பகீர்.. எனக்கும் நடந்திருக்கு.. அந்த படத்தை மறக்க முடியாது
சென்னை: சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியளராக இருக்கும் விசித்திரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததை குறித்து பேசி இருந்தார்.
இந்த நிலையில் அது பற்றி பேட்டி ஒன்றில் நடிகை காதல் சரண்யா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

அப்போது விசித்ராவிற்கு மட்டுமல்ல எனக்கும் சினிமாவில் இதுபோன்ற மோசமான அனுபவங்கள் நடந்து இருக்கிறது என்று சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் பாலியல் பிரச்சனைகள் எல்லா துறையிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவுகிறது என்ற நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விசித்திரா தான் கடந்து வந்த மோசமான கதை என்ற டாஸ்கில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்து இருந்தார்.
அதில் தன்னக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து அப்போது அவருக்கு ஆதரவாக அந்த திரைப்படத்தின் சண்டை பயிற்சியாளரும் நடந்து கொண்டதும் அந்த நேரத்தில் தனக்கு நடிகர் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை என்று வேதனையோடு பேசி இருந்தார். இந்த செய்தி தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. விசித்திரா குறிப்பிட்ட அந்த தெலுங்கு நடிகர் முன்னணி நடிகராக இப்போதும் இருக்கும் நிலையில் இதே போன்ற அனுபவம் எங்களுக்கும் நடக்கிறது என்று பல நடிகைகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். அதில் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான சரண்யாவும் பேட்டி ஒன்றில் தன்னுடைய கசப்பான அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் சினிமாவில் விசித்திரா சொன்னது போன்று வெளியே தெரியாமல் ஆயிரம் கதை இருக்கிறது. அதுவும் எங்களை போன்று ஆரம்பத்தில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருக்கும் நடிகைகள் அதிகமாக இந்த கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். நானும் கூட அனுபவித்திருக்கிறேன். நானும் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பு வாய்ப்புக்காக காத்திருக்கும் போது பல மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது.
நாம கீழ் நிலையில் இருக்கும் போது இது பற்றி வெளியே என்ன சொன்னாலும் அது பெரியதாக ஆகாது. பெயர், புகழ், அதிகாரம் என எல்லாம் இருந்தால் தான் நமக்கு நடந்த அநியாயத்தை வெளியே சொல்ல முடியும். அதுபோலத்தான் விசித்ரா 22 வருஷம் கழித்து இது பற்றி பேசி இருக்கிறார். அவர் இப்போ சொன்னது தப்பே கிடையாது. இத்தனை வருடம் கழித்து தனக்கு நடந்த அநியாயத்தை பற்றி அவர் பேசுகிறார்.
இது பாராட்டக்கூடிய விஷயம் தான். ஒரு சிலர் இதை ஏன் இத்தனை வருஷமா சொல்லல என்று கேட்கிறார்கள். இதெல்லாம் தப்பு, எனக்கும் விசித்ரா சொன்னது போல நடந்து இருக்கு. அந்த நேரத்தில் இதையெல்லாம் தாண்டி தான் நான் வந்திருக்கேன். அப்போ நான் இதை எல்லாம் பேசினால் யாரும் காது கொடுத்து கூட கேட்க ஆள் இல்லை. நீங்க தானே இந்த துறையை தேர்ந்தெடுத்தீங்க. மீடியானாலே இப்படித்தானே இருக்கும் என்று சிலர் இளக்காரமா பேசி விடுவார்கள்.
அதோடு நான் இன்னும் ஒன்று சொல்லிக்க ஆசைப்படுகிறேன். இந்த பிரச்சனை சினிமா துறையில் மட்டுமல்ல பல துறைகளில் இருக்கத்தான் செய்கிறது. நான் சினிமாவில் காதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தேன். அதற்குப் பிறகு பேராண்மை திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த திரைப்படத்தை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது.
அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நான் அவ்வளவு பாதுகாப்பாக ஃபீல் பண்ணுனேன். அந்த மாதிரி எனக்கு நல்ல அனுபவங்கள் கொடுத்த பட குழுவினர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சில மோசமான அனுபவங்களை கொடுத்த நபர்களும் இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் சரண்யா பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications