என் காதலியை பலாத்காரம் செய்து கொன்னுட்டாங்க! பிக் பாஸில் கதறி அழுத சத்யா.. அதிர்ச்சிகரமான காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சத்யா நேற்று கதை சொல்லும் டாஸ்கில் தன்னுடைய முதல் காதலியை சிலர் கொலை செய்து விட்டனர் என்று அதிர்ச்சிகரமான விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பல சோகங்கள் பற்றி சொல்லுவது வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம்தான்‌ தற்போதைய சீசனில் கூட போட்டியாளர்கள் சொல்லும் கதை எதிரில் இருந்து கேட்கும் போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் டிஸ்லைக் கொடுத்து விட்டால் கதை சொல்பவர்கள் தொடர்ந்து கதை சொல்ல முடியாது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு வெடிகுண்டை கையில் கொடுத்து விடுவார்கள். அவர்கள் தூங்கும் போதும் சாப்பிடும்போது மட்டும்தான் அதை கீழே வைக்க வேண்டும். மற்ற நேரங்களில் அதை கையில் வைத்துக் கொண்டுதான் சுற்றி திரிய வேண்டும். தீபக்கிற்கு அந்த தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் கையில் வெடிகுண்டை தூக்கிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அதுபோல இந்த சீசனில் அன்ஷிதா, ஜாக்குலின், பவித்ரா போன்றோர் வெளியே தெரியாத பல சோகங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்கள். அந்த வரிசையில் சத்யா தன்னுடைய சோக கதையை சொல்லியது பலராலேயும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது. அதாவது அவர் கல்லூரி படிக்கும் பருவத்திலேயே ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.

அந்த காதல் விஷயம் இரு வீட்டிற்கும் தெரிய வந்திருக்கிறது. தெரிந்த போது அந்த பெண்ணின் உறவினர்கள் தன்னுடைய ஊருக்கு சென்று விட்டார்களாம். அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் அவர்களோடு சென்று இருக்கிறார். அப்போது ஒரு இடத்திற்கு போயிட்டு வரேன் என்று சத்தியாவிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

அங்கு போன இடத்தில் சிலர் கற்பழித்து அந்த பெண்ணை கொலை செய்து விட்டார்களாம். அந்த விஷயம் சத்யாவிற்கு சில நாட்களுக்கு பிறகு தான் தெரிந்திருக்கிறது. அதை பற்றி நண்பர்கள் சொல்லாமல் தான் சத்யாவின் காதலியின் உடலை பார்க்க கூட்டிட்டு போயிருக்கிறார்கள். அங்கு போன பிறகு அங்கு நடந்த கொடுமையை தெரிந்ததும் சத்தியா ரொம்பவும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாரா.

அதற்கு பிறகு தற்கொலை முயற்சி எடுத்து இருக்கிறார். அதற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் தான் காப்பாற்றி இருக்கிறார்கள். அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்துதான் பாடகி ரம்யாவை காதலித்திருக்கிறார். முதலில் ரம்யாவோடு நட்பாக தான் பழகி இருக்கிறார். பிறகு காதல் ஏற்பட்டது. இப்ப வரைக்கும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

எங்களுடைய வாழ்க்கையில் மகன் வந்த பிறகுதான் எனக்கு ஒரு பெரிய பிடிப்பு ஏற்பட்டது. என்னுடைய மகன்தான் எனக்கு எல்லாமே என்று நான் மாறிவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் வந்தது அப்போது என்னுடைய மனைவி ரம்யா தான் எனக்கு உறுதுணையாக இருந்தார் என்று கண்கலங்க சத்யா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+