ரூ.8 லட்சம் பெட்டியை எடுத்த ஜாக்குலின்.. ஆனால் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்.. பதறிப்போன போட்டியாளர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் 14 ஆவது நாளுக்கான எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜாக்குலின் 8 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு பிக்பாஸ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமையோடு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. கிராண்ட் பினாலே நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது.

கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அருண் மற்றும் தீபக் எவிக்ஷன் செய்யப்பட்டிருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல ஒவ்வொரு சீசனிலும் 15 ஆவது வாரத்தில் ஒரு அன்ஃபேர் எவிக்ஷன் இவருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதனால் இந்த வாரத்தில் யார் வெளியேற்ற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்த முறை பிக் பாஸ் வித்தியாசமாக கையாண்டு இருக்கிறது. இந்த முறை பணப்பெட்டி டாஸ்க் வைத்து அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வராத போட்டியாளர் எவிக்ஷன் செய்யப்படுவார். அவரால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்க்கப்படும் முத்துக்குமரன் தான் முதலில் இந்த டாஸ்க்கில் கலந்து கொள்ள போகிறேன் என்று களம் இறங்கி இருந்தார். அவர் ஐம்பதாயிரம் பெட்டியை தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அடுத்ததாக ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு தேர்வாகி இருந்த ரயான் இந்த டாஸ்க் கலந்து கொண்டார்.
ரயான் ரூ.2 லட்சம் பெட்டியை எடுத்திருந்தார். அடுத்ததாக ரூ.2 லட்சம் பெட்டி வைக்கப்பட்டது. அப்போது ஜாக்குலின் மற்றும் பவித்ரா இருவரும் போட்டி போட்டனர். பிறகு ஜாக்குலின் விட்டுக் கொடுக்க பவித்ரா வெற்றிகரமாக பெட்டியை தூக்கி கொண்டு வந்தார். அடுத்ததாக ஜாக்குலின் கலந்து கொள்ளும் லேட்டஸ்ட் ப்ரொமோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் 8 லட்சத்திற்கான பணத்தை எடுக்க ஜாக்குலின் முன் வருகிறார். ஆனாலும் ஜாக்குலின் திடீரென்று அழுகிறார். அதற்கு பிக் பாஸ் ஏன் அழுகுறீங்க ஜாக்குலின் என்று கேட்க, இந்த வீட்டை திரும்பிப் பார்க்க முடியாதுன்னு பயமாய் இருக்கு பிக்பாஸ் என்று சொல்கிறார். பிறகு ஜாக்குலின் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்து விடுகிறார்.
ஆனால் அவர் சரியான நேரத்திற்குள் வந்தாரா இல்லையா என்பது அதில் காட்டப்படவில்லை. அதில் காட்டுவது போல பார்த்தால் ஒரு நிமிடத்திற்கு முன்பு வந்தது போல தான் காட்டப்படுகிறது. ஆனால் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். இதனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோருமே பதட்டத்தில் இருக்கிறார்கள். இந்த சீசனில் 15 வாரங்கள் நிகழ்ச்சி நடைபெறும் போது 15 வாரமும் ஜாக்குலின் மட்டும்தான் நாமினேஷனில் இடம் பிடித்திருந்தார். ஜாக்குலின் மட்டும்தான் 15 முறையும் சேவ் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications