பிக் பாஸ் 8: இரண்டாவது முறையாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாச்சனா.. இத்தனை லட்சம் சம்பளமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் நேற்று எவிக்ஷன் நடைபெற்றது. அதில் வெளியேற்றப்பட்ட சாச்சனா இந்த நிகழ்ச்சியில் இருந்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதியில் இருந்து பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. 60 நாட்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியில் அதிகமான போட்டியாளர்கள் இருந்ததன் காரணமாக இந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் என்று நேற்று காலையில் வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி அறிவித்திருந்தார்.

அவர் சொன்னது போலவே நேற்று எபிசோடில் இரண்டு போட்டிகள் வெளியேற்றப்பட்டார். அதில் முதலாவதாக விஜே ஆனந்தி வெளியேற்றப்பட்டார். அப்போது அவர் மட்டும்தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார்கள் என்று மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் நிம்மதியாக இருந்தனர். ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சாச்சனா எவிக்ஷன் என்று விஜய் சேதுபதி அறிவித்திருந்தார்.
இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா, மஞ்சரி, சாச்சனா ஆனந்தி உட்பட மொத்தம் 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் வீக்எண்டு எபிசோடு முடிவில் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி கடைசியில் அவர்களை சேவ் செய்திருந்தார். இதனால் மற்ற பத்து போட்டியாளர்களில் யார் எலிமினேடாவார்கள் என்ற எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு எதிர் பார்த்தபடியே சாச்சனா மற்றும் ஆனந்தி எலிமினேட் செய்யப்பட்டது மகிழ்ச்சியை கொடுத்தது.
அதிலும் சாச்சனா எவிக்ஷனை பலர் கொண்டாடி வருகிறார்கள். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே யாரும் எதிர்பார்க்காத வகையில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிறகு சில நாட்களில் நிகழ்ச்சிக்குள் மீண்டும் வந்தார். சீக்ரெட் ரூமில் இருந்த சாச்சனா வெளியே நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்ததால் இவருடைய விளையாட்டு பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவர் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்ததால் இவருக்கு எதிராக நிறைய நெகட்டிவ்களும் வர ஆரம்பித்தது. இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்த 60 நாட்களுக்கு வாங்கிய சம்பள விவரம் வெளியாகியிருக்கிறது.
அதன்படி அவருக்கு ஒரு நாளைக்கு 20,000 சம்பளம் பேசப்பட்டதாம். அந்த வகையில் 60 நாட்களுக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பணம் முழுமையாக சாச்சனாவிற்கு கிடைக்காது. இதில்தான் ஜிஎஸ்டி எல்லாம் பிடித்தது போக மீத தொகை கிடைக்கும். அதுவும் உடனே கிடைக்க வாய்ப்பு கிடையாது. நிகழ்ச்சி முடியும் போதுதான் மொத்த சம்பளமும் சாச்சனாவிற்கு செட்டில் ஆகும் என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications