பிக் பாஸில் அன்ஷிதாவை தொடர்ந்து வெளியேற போகும் நபர் இவரா? குவியும் கம்ப்ளைன்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. அதில் யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் பிறகு 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

அதில் 14 போட்டியாளர்கள் எவிக்ஷனாகி வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். அதுபோல இந்த வாரத்தில் டிக்கெட் 2 பினாலே டாஸ்க் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் முதல் டாஸ்க்கில் சௌந்தர்யா வெற்றி பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுபோல இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. கடந்த வாரத்தில் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் இந்த வாரத்தின் எவிக்ஷனுக்கான நாமினேஷன் காலையிலேயே நடைபெற்றது. அதற்கான முதல் ப்ரோமோ வெளியாக இருந்தது.

அதில் லிவிங் ஏரியாவில் போட்டியாளர்கள் அமர்ந்திருக்கின்றனர். அப்போது பிக் பாஸ் இந்த வீட்டில் இருந்து வெளியேற சரியான காரணம் உடன் இரண்டு நபர்களை தேர்வு செய்து சொல்லுங்க என்று டாஸ்க் கொடுத்திருக்கிறார். அதில் ஜாக்குலின் விமர்சனங்கள் வைத்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் அதனால் நாமினேட் பண்ணுகிறேன் என்று விஷாலை நாமினேட் செய்கிறார்.
அடுத்ததாக வரும் முத்து, ரயான் ஆகியோர் கேம் பற்றிய புரிதல் ராணவிற்கு இல்லை என்று அவரை நாமினேட் செய்கிறார்கள். மேலும் நாம யாரை வைத்து விளையாடலாம் என்று பிளான் பண்ணி விளையாடுறாங்க, பிரண்ட்ஸ் எதாவது சொல்லிவிட்டால் வெளியே நாங்க தப்பா தெரிஞ்சிடுவோம் என்று சேஃப் கேம் விளையாடுறாங்க என்று விஷால் மற்றும் சௌந்தர்யா ஜாக்குலினை நாமினேட் செய்கிறார்கள்.

இப்படியாக முதல் ப்ரோமோ இருக்கும் நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் நாமினேஷன் ஆனவர்களின் லிஸ்ட் சொல்கிறார். அதில் ராணவ், பவித்ரா, விஷால், அருண், தீபக், ரயான், மஞ்சரி மற்றும் ஜாக்குலின் போன்ற 8 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து முத்துக்குமரன் நாமினேஷன் குறித்து மஞ்சரி மற்றும் ராயனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் இதை வைத்து இந்த வாரத்தில் ஒரு பஞ்சாயத்து வரும் என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications