பிக் பாஸ் 8ல் ட்விஸ்ட்.. இந்த வாரம் வெளியே போகும் நபர் இவரா? அப்போ காரணம் இதுதானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. வாக்குகளின் அடிப்படையில் மூன்று போட்டியாளர்கள் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். அது யார் என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கிய நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. 80 நாட்களை தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதற்குப் பிறகு 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். இதில் பலர் எலக்சன் ஆகி வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இன்னும் 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத பல சம்பவங்களும் நடைபெற்று இருக்கிறது. போட்டியாளர்களின் உறவினர்களின் உணர்வுபூர்வமான தருணங்கள் ரசிகர்களை எமோஷனல் அடைய செய்தது.
சில போட்டியாளர்களின் உறவினர்கள் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் தங்களுக்குள் இருக்கும் கோபம் வன்மத்தையும் வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் நேற்று வெளியான ப்ரோமோக்கள் அனல் பறக்க இருக்கிறது.
முதல் ப்ரோமோவில் சௌந்தர்யாவின் காதலரான விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தார். அவரிடம் சௌந்தர்யா தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார். அதை சற்றும் எதிர்பார்க்காத விஷ்ணு நீ எங்க வச்சு சொல்லிட்ட நான் எப்படி வெளியே போய் இதை ஃபேஸ் பண்ண போறேன்னு தெரியலையே என்று பதறி இருந்தார்.
அதைத்தொடர்ந்து அருணுக்காக அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் மிஸ் பண்ணுவதாக பேசிக் கொண்டனர். பிறகு நான் இதுவரைக்கும் ஹார்லி குயின் என்று சொல்வது இவங்க தான் என்று அருண் தன்னுடைய காதலை வெளி உலகத்திற்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் அறிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து வி.ஜே விஷாலுக்காக பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடிக்கும் நேஹா கலந்து கொண்டார். அதுபோல பவித்ராவிற்காக சம்யுக்தாவும், முத்துக்குமரன் மற்றும் மஞ்சரிகாக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டனர். இதனால் நிகழ்ச்சி களைகட்டி இருந்தது. ஆனாலும் வார இறுதியில் ஒருவர் வெளியேறுவது வாடிக்கையாக இருக்கிறது.
இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் 12 போட்டியாளர்கள் இருப்பதால் இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவர் மிட் நைட் எவிக்ஷன் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் அடுத்த வாரத்தில் வருவார்கள். அதனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எண்ணிக்கை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வார வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் அன்ஷிதா, விஜே விஷால், ரயான் மூன்று பேரும் தான் இருக்கிறார்கள்.
இவர்களில் மூன்று பேரில் இருவர் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் சௌந்தர்யா பற்றி விஜே விஷால் ஆரம்பத்திலேயே தவறாக பேசியதால் அவருக்கு வாக்குகள் குறைவாக கிடைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. நேற்று சௌந்தர்யா சார்பாக கலந்து கொண்ட விஷ்ணு விஷாலிடம் சௌந்தர்யா குறித்து பேசியது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்று கூறியிருந்தார்.
அதுபோல வி.ஜே விஷாலுக்கு ஆதரவாக வந்த நேஹாவும் சௌந்தர்யா இல்லாத இடத்தில் நீங்கள் பேசியது தவறு, அதற்கு நீங்கள் சரியாக மன்னிப்பு கேட்கவில்லை என்று அறிவுறுத்தி இருந்தார். அதுபோல அன்ஷிதா கடந்த வார டாஸ்க்குகளில் விளையாடிய விதம் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்ததால் அவருக்கும் வாக்குகள் குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் இன்னும் சில மணி நேரத்தில் உறுதியான தகவல்கள் வெளியாகி விடும்.












Click it and Unblock the Notifications