பிக் பாஸ் 8: இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இல்ல! ஒன்றுதான்.. அதுவும் இந்த நபரா? செம சம்பவம் இருக்கு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு வாரத்தில் இரண்டு எவிக்ஷன் நடைபெற்றது போல இந்த வாரம் இல்லை. இந்த வாரத்தில் ஒரு நபர் தான் வெளியேறப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் வார இறுதி நாள் வந்துவிட்டது. இந்த நாளை நோக்கி தான் எல்லோரும் காத்திருந்தது. இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு செம சம்பவங்கள் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த வாரத்தில் டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் கண்டண்டுகளை அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள்.

அதில் விஜய் சேதுபதி எதை விசாரிக்க போகிறார்? எதை விட போகிறார்? யாருக்கு ரோஸ்ட் விடப்போகிறார்? யாரை பாராட்ட போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சனிக்கிழமை எபிசோடுக்கான சூட்டிங் தற்போது தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வாரத்தில் விஜய் சேதுபதி இந்த விஷயத்தை எல்லாம் மறக்காமல் கேட்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் இணையத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.
அதில் ராணவ் கையை ஜெஃப்ரி மற்றும் அருண் உடைத்தது, அதற்குப் பிறகு ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட மனசாட்சி இல்லாமல் சிலர் நடந்து கொண்டது.. எல்லாம் கேட்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். அதுபோல நேற்றைய எபிசோடில் முத்துக்குமரன் பவித்ராவிற்காக தியாகியாக மாறியது குறித்தும் விஜய் சேதுபதி இந்த வாரம் விசாரிக்க வேண்டும் என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது.

இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இந்த வார வாக்குகளின் அடிப்படையில் ரயான் மற்றும் ரஞ்சித் இருவரும் குறைவாக பெற்று இருக்கிறார்கள். அதில் ரயான் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வென்றிருந்தார். ஆனால் நேற்று முத்துக்குமரன் செய்த செயலால் கோபமான பிக் பாஸ் அந்த பாஸ் செல்லாது என்று சொல்லிவிட்டார்.
இதனால் இந்த வாரத்தில் ரஞ்சித் வெளியேறப் போகிறாரா? அல்லது ரயான் வெளியேறப் போகிறாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது. அதுபோல நேற்று அன் அபிசியல் வாக்குகளின் அடிப்படையில் பவித்ராவும் குறைவாக பெற்று இருக்கிறார். இதனால் இவர்கள் மூன்று பேரில் தான் ஒருவர் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வரும் நாள் நெருங்கிவிட்டது. இதற்கு முந்தைய சீசன்களில் 50 நாட்களை கடந்ததும் போட்டியாளர்கள் மீண்டும் வைல்ட் கார்டாக உள்ளே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த சீசனில் தான் அது இன்னும் நடைபெறவில்லை. அதனால் இந்த வாரத்தில் என்னவெல்லாம் மாற்றம் நடக்கப் போகிறது இன்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications