பிக் பாஸ் 8: முதல் நாளே நடந்த சண்டை.. 24 மணி நேரத்தில் எவிக்க்ஷன் சரியா? தொடங்கியாச்சு பிரச்சனை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது. அதுபோல முதல் 24 மணி நேரத்திற்கு ஒரு எவிக்ஷன் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கும் நிலையில் இது பற்றி இணையத்தில் அதிகமான விமர்சனங்கள் விழுந்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளும், விமர்சனங்களும் நிறைந்தது தான். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு பக்கம் பாராட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் இதை அப்படி செய்திருக்கலாம் அதை இப்படி செய்திருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுவது வழக்கமானது தான். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இந்த நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதுமே போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது. இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் வீட்டில் ஒரு கோடு போடப்பட்டு பாய்ஸ் தனியாகவும் கேர்ள்ஸ் தனியாகவும் அறைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் எல்லா போட்டியாளர்களும் சமம் என்கிற ரீதியில் தான் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த சீசனில் பெண்கள் சேஃப்டி கார்டு தூக்கி பிரதீப்புக்கு எதிராக பெண்கள் குற்றம் சுமத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? என்றும் சந்தேகப்பட வைக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஆண்கள் எந்த பக்கம் இருக்க வேண்டும், பெண்கள் எந்த பக்கம் இருக்க வேண்டும் என்று போட்டியாளர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் 8: கானா பாடல், மானாட்டம், மயிலாட்டத்துடன் தொடங்கிய பிக் பாஸ்! விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை
ஆரம்பத்தில் வந்த பெண் போட்டியாளர்கள் தாங்கள் சொகுசாக தங்க வேண்டும் என்பதற்காக அந்தப் பக்கத்தை தேர்வு செய்து இருந்தனர். அதை விட்டுக் கொடுத்த ஆண்கள் நாங்கள் உங்களுக்கு சொகுசாக இருக்கும் பக்கத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் ஒரு வாரம் பெண்கள் யாருமே ஆண்களை நாமினேஷன் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதற்கு சில பெண்கள் உடன்படாமல் பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது. அதுபோல நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சௌந்தர்யா நஞ்சுண்டன் நான் மாடலாகவும் நடிகையாகவும் இருந்தாலும் என்னுடைய குரலால் பல இடங்களில் அவமானப்பட்டு இருக்கிறேன் என்று தன்னுடைய வருத்தத்தை விஜய் சேதுபதியிடம் சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது அங்கு இருக்கும் ஒரு சிலராலும் அவமானப்படுத்தப்படுகிறார்.

அதிலும் ஆரம்பத்தில் மகாராஜா படத்தில் குழந்தையாக நடித்த சாச்சனா உங்களுக்கு குரல் என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு சௌந்தர்யா என்னுடைய நிஜ குரல் இதுதான் என்று சொல்ல அவர் விட்டுவிடுகிறார். ஆனால் அதற்குப் பிறகு விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்த தர்ஷனா சௌந்தர்யாவிடம் உன் குரலுக்கு என்ன ஆச்சு பெண்மையோடு பேசு.. இது என்ன இப்படி பேசிட்டு இருக்கிறா... என்று ஏளனமாக பேசுவதை பார்க்கும் போது சௌந்தர்யாவின் வேதனை அவருடைய முகத்திலேயே தெரிகிறது.
இதனால் தர்ஷனாவை ரசிகர்கள் திட்டி வருகிறார்கள். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க முதல் 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் நடக்கப்போகிறது என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். இது எந்த சீசனிலும் இல்லாத முறையாக இருக்கிறது. இதை வைத்துதான் இப்போது ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். புதுமையை செய்ய வேண்டும் என்பதில் தப்பில்லை ஆனால் ஒரு நாள் கூட பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கவில்லை என்றால் எதற்காக அந்த போட்டியாளரை இவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
குறைந்தபட்சம் ஒரு வாரமாவது ஒரு வீட்டிற்குள் இருந்தால் தானே அவருடைய கேரக்டர் வெளியே தெரிய தெரியும். தங்களுடைய உண்மையான கேரக்டரை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். ஆனால் முதல் 24 மணி நேரத்திற்குள் எவிக்ஷன் செய்வது அன்ஃபேர் என்பது பலருடைய கருத்து. அதிலும் விஜய் சேதுபதியின் ரீல் மகளாக நடித்த சாச்சனா தான் முதல் எலிமினேஷன் ஆக வெளியே வந்திருக்கிறார். இதனால் சாச்சனாவின் ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications