BB Tamil 8 grand finale: ரசிகர்கள் போராட்டம் வீணானது? ரன்னர், வின்னர் இவங்கதான்! கோப்பை கை மாறியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் நாளை கிராண்ட் பினாலே ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் இந்த சீசனில் யார் ரன்னராகவும், வின்னராகவும் ஜெயித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் வின்னராக முத்துக்குமரனும்,ரன்னராக விஜே விஷாலும் வெற்றி பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கிராண்ட் பினாலே ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.

bigg boss tamil television bigg boss tamil 8 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. காரணம் இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் எட்டாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே தான் இதிலிருந்து ரெஸ்ட் எடுக்க போவதாக அறிவித்திருந்தார்.

அதற்கு பிறகு யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது. பலருடைய கருத்து விஜய் சேதுபதியாக இருந்தது. அதையே விஜய் டிவி டிக் அடித்து விஜய் சேதுபதியை கமிட் செய்து விட்டனர். விஜய் சேதுபதி தன்னால் சிறப்பான தொகுப்பாளராக இருக்க முடியும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நிரூபித்து இருக்கிறார்.

bigg boss tamil television bigg boss tamil 8 8

இதுவரைக்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தது ஒருவித ஸ்டைல் ஆக இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி எந்த விஷயத்தையும் முகத்துக்கு நேராக கேட்டு போட்டியாளர்களை மட்டுமல்ல பார்க்கும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். அதோடு மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை எல்லாம் விஜய் சேதுபதி கேட்டது நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் இந்த சீசனில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டதால் இவர்களில் யாரை ஜெயிக்க வைக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அதே நேரத்தில் மக்களின் தீர்ப்பே இறுதியானது என்று விஜய் டிவியில் அதிரடியான பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

bigg boss tamil television bigg boss tamil 8 8

சில வாரங்களுக்கு முன்புவரைக்கும் டைட்டில் வின்னராக தீபக் இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில் அவருக்கு வாக்குகள் குறைவாக இருந்ததால் அவர் திடீரென்று வெளியேற்றப்பட்டார். அவரைப் போல ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்க்கில் பெட்டி எடுக்கும் போது இரண்டு நொடி தாமதத்தால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சௌந்தர்யா, பவித்ரா, முத்துக்குமரன், ரயான் மற்றும் வி ஜே விஷால் என ஐந்து பேர் மட்டும் தான் பைனலுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களில் வாக்குகளின் அடிப்படையில் முத்துகுமரன் மற்ற போட்டியாளர்களை விட 75% அதிகமாக பெற்றிருப்பதால் அவர்தான் டைட்டில் வின்னராக தேர்வு ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

bigg boss tamil television bigg boss tamil 8 8

அதைத்தொடர்ந்து சௌந்தர்யா ரன்னராக இரண்டாவது இடத்தில் தேர்வாகுவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாக்குகளின் அடிப்படையில் விஜே விஷால் தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அவர் தான் ரன்னராக தேர்வாகி இருக்கிறார். வெற்றி கோப்பை முத்துக்குமரனுக்கும், ரன்னராக விஜே விஷாலும் தேர்வாகி இருக்கிறார்கள் என்பது நாளை தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

சௌந்தர்யா பி ஆர் வைத்து வாக்குகள் அளித்து சேவ் ஆகி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் கடைசியில் அவர் மூன்றாவது இடத்தில் தேர்வாகி இருப்பது அவருடைய ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது. அதுபோல நான்காவதாக பவித்ராவும், ஐந்தாவது இடத்தில் ரயானும் வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

bigg boss tamil television bigg boss tamil 8 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+