முத்துக்குமரன் 100 நாளும் பிக் பாஸ் வீட்டில் நடிச்சாரா? போலித்தனமே இல்லாதவர் இவர்தான்: பிரபலம் நச்
சென்னை: . பலவருட காலம் மீடியாவில் உள்ள தீபக், முத்துக்குமாரிடம் பேசும்போது "இன்று என்னை எல்லாரும் நம்புகிறார்கள், என் வீட்டிலும் நான் சொல்வதை கேட்கிறார்கள் என்றால் அது உன்னால்தான்" என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சொல்லி உள்ளார்.
Cheyaaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "மக்களுக்கு ஏன் பிக்பாஸ் வெற்றியாளர்களை பிடிக்குது? அவர்களின் செயல்பாடுகளா? அவர்களின் சொந்த விஷயங்களை அறிந்து கொள்வதா? தெரியவில்லை. சீசன் 7-ல் அர்ச்சனா என்ற பெண்தான் டைட்டில் வின்னர்.. ஆனால் ஆரம்பத்தில் அர்ச்சனா ஒரு பேட்டி தந்திருந்தார்..

வைரமுத்து: அதில், என் அப்பா ஒரு தமிழ் ஆசிரியர்.. நிறைய தமிழ் படிக்க சொல்வார், திருக்குறள், கவிதை புத்தகங்களை என்னிடம் தந்து படிக்க வைத்தார்.. ஒருமுறை வைரமுத்துவின் படைப்புகளையும் தந்து படிக்க சொன்னார். நான் வைரமுத்துவின் அனைத்து புத்தகங்களையும் படித்திருக்கிறேன்.
ஒருநாள் வைரமுத்துவையே நேரில் சந்தித்து பேசினேன்.. அவர் எழுதிய புத்தகங்களை படித்திருப்பதாக சொன்னேன்.. உடனே வைரமுத்துவும் என்னுடைய தலையை தடவி வாழ்த்தினார்" என்றெல்லாம் அர்ச்சனா கூறியிருந்தார்.
தமிழ் ஆர்வம்: அதுமட்டுமல்ல, தான் ஒரு டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதுக்கான முயற்சியிலும் இறங்கியபோதுதான, அவரது அப்பா தமிழ் மீது கவனத்தை திசை திருப்பிவிட்டதாக கூறியிருந்தார்.. தமிழ் ஆர்வம் தவிர, அர்ச்சனாவின் யதார்த்த பேச்சும், எளிமையும் மக்களுக்கு பிடித்திருந்தது போலும்..
இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரை யாரென்றே நமக்கு தெரியவில்லை.. நிகழ்ச்சியும் பல சோர்வுகளை தந்திருந்தது.. 100 நாள் எப்படி ஓட்டப்போகிறார்களோ? என்று சந்தேகமும் எழுந்தது.. அதேபோல விஜய் சேதுபதியும் நிகழ்ச்சியிலிருந்து மாறப்போவதாக சொன்னார்கள்.. பிறகு, பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளையும் மாற்றி பார்த்தார்கள். எனினும், ஆரம்பத்தைவிட, கடைசி நாட்களில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தது..
ஜாக்குலின்: அந்தவகையில், ஜாக்குலின் வெளியேற்றப்பட்டது அநியாயம் என்று ஒருதரப்பினர் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. எனினும், இது திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட ஒன்று. ஆனால், நேற்றிலிருந்தே டைட்டில் வின்னர், முத்துக்குமரன் என்று சோஷியல் மீடியாவில் சொல்லி கொண்டிருக்கிறார்கள்..
தமிழ் மீது முத்துக்குமரனின் பற்று, அவர் பேசுற பேச்சு, கண்ணீரோடு சில விஷயங்களை அவர் சொல்வது, யதார்த்தமாக பேசுவது இதெல்லாம் பலருக்கும் பிடித்திருக்கலாம். அதைவிட முக்கியமாக, பிக்பாஸ் வீட்டில் 100 நாள் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற மனோதிடம் முத்துக்குமாரிடம் உள்ளதை பாராட்டலாம்.
நடிக்க முடியாது: முத்துக்குமரனும், தீபக்கும் நெருக்கமாக உள்ளனர்.. அண்ணன், தம்பி போலவே இருக்கிறார்கள். தீபக் வெளியேற்றப்பட்டபோது, கண்ணீருடன் முத்துக்குமரன் பேசியதில் செயற்கைத்தனம் துளியும் இல்லை. பலவருட காலம் மீடியாவில் உள்ள தீபக் முத்துக்குமாரிடம், "இன்று என்னை எல்லாரும் நம்புகிறார்கள், என் வீட்டிலும் நான் சொல்வதை கேட்கிறார்கள் என்றால் அது உன்னால்தான்" என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
சிவகங்கை மாவட்டத்தில், பின்தங்கிய நபர், எந்தவிதமான பூச்சும் இல்லாமல் வெள்ளந்தியாக பேசுகிறார் முத்துக்குமரன்.. 100 நாள் யாராலுமே அந்த வீட்டிற்குள் நடிக்க முடியாது. இன்று முத்துக்குமரன் வெளியேறினால், 41 லட்சம் ஊதியம் கிடைக்கும் என்கிறார்கள்.. ஒரு மிகப்பெரிய சேனல் 41 லட்சம் தருகிறது என்றால், அங்கே நடிப்பு எப்படி இருக்கும்.
புத்திசாலித்தனம்: வலியில் உள்ள மனிதன் அல்லது வேட்கையில் உள்ள மிருகம், இவைகளின் வேகம் அதிகமாக எப்போதுமே இருக்கும். அதேசமயம், புத்திசாலித்தனமும் இருக்கும் வேட்கை + புத்திசாலித்தனமும் சேர்ந்த விளையாட்டைத்தான் முத்துக்குமரன் விளையாடி இருக்கிறார். இன்று யார் வெற்றியாளர் என்று தெரியவில்லை. ஆனால், முத்துக்குமரன் சிறப்பாக விளையாடியிருக்கிறார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications