Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் 8: இளைஞர்களின் கனவு கன்னி முதல்.. குடும்ப பிரச்சனையால் பிரபலமான நடிகர் வரை! லீக்கான லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் ஏற்கனவே சில போட்டியாளர்களின் பெயர் வெளியாகியுள்ளதை தொடர்ந்து இப்போது இரண்டாவது கட்டமாக தேர்வாகி இருக்கும் போட்டியாளர்கள் என்று சிலருடைய பெயர்கள் வெளியாகியிருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

இதுவரைக்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாக ஏழு சீசன்கள் முடிவடைந்து இருந்தாலும் எட்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்பதுதான் சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கு காரணம் இந்த சீசனில் தொகுப்பாளர் மாறியதும் தான். அதோடு இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எப்படி கொண்டு போகப் போகிறார்? ஏற்கனவே தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனை விட வித்தியாசமாக கொண்டு போகப் போகிறாரா? அல்லது அவரை பின்தொடர போகிறாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி தன்னுடைய நடுநிலை தவறாமல் எந்த இடத்திலும் தனித்துவமாக பேசுவார். அதனாலேயே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார். அதனால் அவர் இயல்பாக இந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டாலே நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்து விடும். இதற்கு முன்பு கமல்ஹாசன் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களை இரண்டு பக்கமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கொண்டு போய் கொண்டு இருந்தார்.

vijay tv bigg boss entertainment

அதுபோல விஜய் சேதுபதியும் நடந்து கொள்வாரா? அல்லது அதைவிட சிறப்பாக இருப்பாரா என்று பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்தில் முதல் ப்ரோமோ வெளியாகி விஜய் சேதுபதி இந்த சீசனில் தொகுப்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் போட்டியாளர்கள் குறித்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் வரும் ப்ரோமோவில் விஜய் சேதுபதியின் செயல்பாடு இந்த சீசனில் எப்படி இருக்கும் என்று மறைமுகமாக காட்டும் விதத்தில் இருக்கும். அதற்கு பிறகு தான் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்படும். ஆனால் இப்போது சில போட்டியாளர்கள் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த அருண், தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகர் தீபக், அதுபோல சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, நடிகர் வினோத் பாபு போன்றோர் கலந்து கொள்வார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதைதொடர்ந்து இப்போது விஜய் டிவியில் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் செல்லமா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அர்னாவ் மற்றும் அந்த சீரியலில் கதாநாயகி அக்ஷிதா இருவரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. சின்னத்திரை ரசிகர்கள் நடிகர் அர்னாவை மறந்திருக்க முடியாது. அவர் அவருடைய காதல் மனைவியோடு ஏற்பட்ட குடும்ப தகராறு பற்றி பலரும் பேசி வந்தனர்.

நடிகர் அர்னாவ் சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் போது அவர்களுடைய திருமண விஷயத்தை வெளியே அறிவித்திருந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் அர்னாவிற்க்கு அவரோடு நடித்த அக்ஷிதாவுடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி திவ்யா ஸ்ரீதர் குற்றசாட்டுகள் வைத்திருந்தார்.

vijay tv bigg boss entertainment

அக்ஷிதாவால் ஏற்பட்ட பிரச்சனையால் தன்னை அர்னாவ் அடித்துவிட்டார் என்று திவ்யா ஸ்ரீதர் மருத்துவமனையில் அட்மிட் ஆனது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்குப் பிறகு அர்னாவ் ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்று அந்த பெண்களோடு அர்னாவ் பேசிய பல வீடியோக்களையும் திவ்யா அடுத்தடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார். இவர்களுடைய பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அக்ஷிதா தான் இருக்கிறார் என்றும் திவ்யா கூறியிருந்த நிலையில் அக்ஷிதா திவ்யாவோடு பேசிய ஆடியோக்களும் வெளியாகி கொண்டிருந்தது.

இப்போது திவ்யா மற்றும் அர்னாவ் இருவரும் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார்கள். இந்த பஞ்சாயத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இவர்களை வைத்து டிஆர்பியை அதிகரிக்கலாம் என்று சேனல் தரப்பு முடிவு செய்து விட்டார்கள் போல அதனாலயே அர்னாவ் மற்றும் அக்ஷிதாவை ஜோடியாக உள்ளே அனுப்புகிறார்கள். ஏற்கனவே அக்ஷிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டு அதிகமாக கண்டன்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து பிரபலம் அடைந்த ஃபரீனாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. பரீனா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் தொடங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக நடிகை தர்ஷா குப்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக பேச்சுகள் அடிபடுகிறது. ஏற்கனவே தர்ஷா குப்தா கலந்து கொள்வதாக இரண்டு சீசனில் பெயர் அடிபட்டது ஆனால் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த சீசனில் அவரும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. விஜய் டிவி சீரியலில் வில்லியாக நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதுபோல தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பயங்கர பிசியாக இருக்கிறார். இணையத்தில் தர்ஷாவுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+