பிக் பாஸ் 8: கொஞ்சம் இடம் கொடுத்தா ஓவரா போறான்! ஜெஃப்ரி பற்றிய குற்றச்சாட்டு! சாச்சிகாவுக்கு பிரச்சனை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் அக்டோபர் 14ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. பெண்கள் அணியினர் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் நாமினேஷன் செய்கின்றனர்.
முதல் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருந்தாலும் நேற்று விஜய் சேதுபதி போட்டியாளர்களை லெப்ட் ரைட் வாங்கி இருந்ததால் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் செம ட்ரீட் கொடுத்து இருக்கிறார். இது மற்ற சீசன்கள் போல இல்ல.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற சொல்லுக்கு ஏற்ப எல்லாமே புதுசாக இருந்தது. ஒரு சில செயல்பாடுகள் கமல்ஹாசனை போலவே இருந்தது. அதாவது நாமினேஷனான போட்டியாளர்கள் எல்லாரையும் ஒன்றாக உட்கார வைப்பது, அவர்களில் எலிமினேஷன் ஆவார்கள் என்பது என்று சக போட்டியாளர்களிடம் கருத்து கேட்பது இதுபோன்ற செயல்கள் கமல்ஹாசனை போல இருந்தாலும் போட்டியாளர்களின் நிறைகுறையை முகத்துக்கு நேராக விஜய் சேதுபதி சொல்லி ரசிகர்களை மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும் அதிர வைத்திருந்தார்.
ஆனால் தான் செய்வது சரியா? தவறா? என்று பார்வையாளர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தது தான் இதை தவிர்த்திருக்கலாம் என்று சிந்தனைகளை உருவாக்குகிறது. விஜய் சேதுபதி சரியான முடிவுகளை எடுத்தாலும் இது நாம் செய்வது சரியா? தவறா? என்று குழப்பம் இருப்பது போல தான் அவருடைய கேள்விகள் இருந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த வாரத்தில் ஆறு பேர் நாமினேஷன் செய்யப்பட்டு அதில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர். அதில் சாச்சிகாவை முதல் நாளே எலிமினேஷன் செய்வது போல செய்து இரண்டு நாட்களில் மீண்டும் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் ரவீந்தர் நேற்று வெளியற்றப்பட்டார் அவர் வெளியே செல்வதற்கு முன்பு போட்டியாளர்களை பற்றிய தன்னுடைய ரிவியூவை சொல்லி அவர்களை கலவரப்படுத்திவிட்டார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது.
அதில் இந்த வாரம் ஆண்கள் அணியினர் பெண்களையும், பெண்கள் அணியினர் ஆண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லி இருக்கிறார். அதில் முதல் ஆளாக தர்ஷா குப்தா ஜெஃப்ரியை நாமினேஷன் செய்திருக்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா ஜெஃப்ரியை நாமினேஷன் செய்கிறார். அதற்கான காரணம் அவர் சொல்கையில் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்தால் ரொம்ப டூம்மச்சா அதை யூஸ் பண்ணிக்கிறானோ என்று எனக்கு தோணுது என சொல்கிறார்.
அடுத்ததாக வந்த சுனிதா நான் ரஞ்சித் சாரை நாமினேசன் செய்கிறேன் என்று சொல்கிறார். அவரை தொடர்ந்து வந்த தர்ஷிகா நானும் ரஞ்சித் சாரை சொல்கிறேன், அவர் எதையுமே ஓபனா பேச மாட்டேங்கிறாரோ என்று தோன்றுகிறது என்று சொல்லியிருக்கிறார். அதை அடுத்ததாக தீபக் மற்றும் அர்னாவ் சௌந்தர்யாவை நாமினேஷன் செய்திருக்கிறார்கள்.
சௌந்தர்யா முதல் நாள் நடந்த ஓபன் நாமினேஷனில் அர்னாவை நாமினேசன் செய்திருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு அன்ஷிதாவையும் அர்னாவையும் ஏற்கனவே தெரியும். ஆனால் அவர்கள் இந்த வீட்டிற்குள் நடந்து கொள்வது பொய்யாக எனக்கு தோணுகிறது அதனால் நான் நாமினேஷன் செய்கிறேன் என்று சௌந்தர்யா சொன்னதை மனதில் வைத்து இப்போது அர்னாவ் கூறியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இவர்களை தொடர்ந்து சத்யா, விஜே விஷால் இருவரும் சாச்சிகாவை நாமினேஷன் செய்கிறார்கள். அதற்கு விஜே விஷால் சொன்ன காரணம் சாச்சிகா வயதை தாண்டி சில விஷயங்களை எல்லாம் பேசுறாங்களோ என்று எனக்கு தோணுகிறது என நாமினேஷன் செய்திருக்கிறார். இதில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications