பிக் பாஸ் 8: இன்றைய எபிசோடில் தரமான சம்பவம்.. 1 பாயின்டில் மிஸ்ஸான டிக்கெட்.. இனி தான் பிரச்சனையே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 18ம் தேதிக்கான முதல் ப்ரோமோவில் யாரு கெத்து என்று நடந்த போட்டியில் பெண்கள் அணியினர் ஜெயித்து இருக்கின்றனர். இதனால் பெண்களுக்கு ஒரு சலுகை கிடைத்திருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த வார எலிமினேஷனில் 10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் முதல் வாரம் முழுக்க சன்டை சச்சரவுகளோடு இருந்த நிகழ்ச்சி இந்த வாரத்தில் கலகலப்பாக மாறி இருக்கிறது.

இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த முறை பிக் பாஸ் அணியினர் பெண்கள் வீடு தனியாகவும், ஆண்கள் வீடு தனியாகவும் அமைத்திருக்கிறார்கள். அதனால் பெண்களா? ஆண்களா? என்ற போட்டி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கிறது. இதுவரைக்கும் ஆண்களும் பெண்களும் சமம் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் இருக்கும். ஆனால் இப்போது இருவரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த சீசனில் டைட்டிலை வெற்றி பெறப்போவது ஆண்களா? பெண்களா? என்ற கேள்விகளோடு தான் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இதில் முதல் வாரம் வீட்டில் தலைவராக தர்ஷிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் பெண்கள் அணி ஜெயித்திருந்தனர். இரண்டாவது வாரம் சத்யா வெற்றி பெற்றார். தற்போது கூட அடுத்தடுத்த டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் யார் கெத்து என்ற ஒரு டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் வெற்றி பெற்றால் நாமினேஷன் ஃப்ரீ என்ற டிக்கெட் பெறலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இதற்காக நேற்றிலிருந்து சில டாஸ்க்குகள் நடைபெற்றது. நேற்று இரவு நிலவரப்படி ஆண்கள் அணியினர் தான் முன்னணியில் இருந்தனர். அப்போது பிக் பாஸ் இன்னும் ஒரு டாஸ்க் இருக்கிறது அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் முடிவு தெரியும் என்று சூசகமாக சொல்லி இருந்தார்.
அதுபோலவே இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அங்கிருக்கும் டிவியில் 18 பொருட்களின் பெயர் காட்டப்படுகிறது. அதே பொருள்களை ஷோரூமில் சென்று வரிசைப்படுத்தி அடுக்க வேண்டும் என்று இருக்கிறது. இதில் பெண்கள் அணியில் மூன்று பேரும், ஆண்கள் அணியில் மூன்று பேரும் கலந்து கொள்கின்றனர். ஆனால் இறுதியாக பெண்கள் அணியினர் ஜெயித்திருக்கிறார்கள்.
இதனால் இந்த பிக் பாஸ் வீட்டில் பெண்கள் அணியினர் கெத்து என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார்கள். இதுவரைக்கும் விளையாடிய விளையாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு பாய்ண்ட் தான் வித்தியாசம். ஒரு பாயின்டில் ஆண்கள் இந்த பட்டத்தை இழந்து விட்டார்கள். அதுபோல பெண்கள் அணியில் நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட் பெற இருப்பதால் அவர்களில் இந்த வாரம் யார் சேவ் ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
சின்ன சின்ன விஷயங்களுக்கும் அதிகமாக பெண் போட்டியாளர்கள் சண்டையிட்டு கொள்ளும் நிலையில் இந்த டிக்கெட்டை பெறுவதற்காக அடித்துக் கொள்வார்களா? அல்லது ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications