பிக் பாஸையே ஏமாற்றிய ஜாக்குலின்? கையும் களவுமாக சிக்க வைத்த பவித்ரா! இந்த வாரம் சம்பவம் இருக்கு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஜாக்குலின் நேற்று அவருடைய குடும்பத்தினர் வந்தபோது நடந்து கொண்ட விதம் பற்றி பவித்ரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு வாரமும் தன்னுடைய விளையாட்டு எப்படி வெளியே போய்க்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஜாக்குலின் வித்தியாசமாக பிளான் போட்டிருப்பதாக பவித்ரா குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் அறிமுகமானார். ஆனால் இதில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் தான் கலந்து கொண்டார்கள். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் மட்டும் அதிக விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டது ஆரம்பத்திலிருந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சையமான ஜாக்குலின் பல சீசன்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று அவருடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் இந்த சீசனில் பெரிய எதிர்பார்ப்போடு கலந்து கொண்டார். ஆனால் அவருடைய விளையாட்டு சில வாரங்களில் நல்ல பெர்பாமன்ஸ் செய்தாலும், சில வாரங்களில் விமர்சனங்களை சந்திக்கிறது.
தேவையில்லாமல் ஒவ்வொரு பிரச்சனைகளையும் தலை விடுகிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அதுபோல இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். இன்று காலையில் இருந்து போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்களும் காதலர்களும் வந்து ரசிகர்களுக்கும் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவம் குறித்து பவித்ரா பேசியது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது நேற்று ஜாக்குலின் குடும்பத்தினர் கடைசியாக வீட்டிற்குள் வந்தனர். ஜாக்குலின் தன்னுடைய குடும்பத்திற்காக பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்தார். கடைசியில் நேற்றுதான் அது நிறைவேறியது.
அப்போது அவருடைய அம்மாவோடு அவருடைய சகோதரியும் வந்திருந்தார். அவர்தான் ஜாக்குலினுக்கு டிசைனராக இருக்கிறாராம். ஒவ்வொரு வாரமும் ஜாக்குலினுக்கு அவர் தான் டிரஸ் அனுப்பி கொண்டிருக்கிறார். அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவதற்கு முன்பே தன்னுடைய விளையாட்டு வெளியே எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று தான் புரிந்து கொள்வதற்காக சில கலரில் டிரஸ் அனுப்புவதற்கு சொல்லி விட்டு வந்திருக்கிறார் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என பவித்ரா அன்ஷிதாவிடம் சொல்லி இருக்கிறார்.

அதாவது நேற்று டிசைனரோடு ஜாக்குலின் பேசும் விதத்தை வைத்து தான் இதை யூகித்துக் கொண்டதாக பவித்ரா கூறி இருக்கிறார். சில வாரங்களில் பச்சை கலர் டிரஸ் வந்தால் அந்த வாரம் நன்றாக விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். சிவப்பு வந்தால் டேஞ்சர் என்று அர்த்தமாம் என்று பவித்ரா கூறி இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பிஆர் வேலை வைத்து வேலை செய்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இதுபோல சீக்ரெட்டை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் பின்பற்றுகிறார்களா? என்பது ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் எப்படி பிக் பாஸ் கவனிக்காமல் விட்டார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications