கோபத்தில் பிக் பாஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. கதறி அழுத போட்டியாளர்கள்.. எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் சொன்ன புது அறிவிப்பை கேட்டு பவித்ரா மற்றும் முத்துக்குமரன் கதறி அழுது இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பொதுவாக ஒரு விஷயத்தை செய்யும்போது நாம் ஒரு விதமான முடிவு வரும் என்று நினைத்து செய்வோம். ஆனால் அங்கு எதிர்பார்க்காத இன்னொரு சம்பவம் நடந்துவிடும். அதுபோலத்தான் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது. அதாவது அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது.

அதில் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா இருவரும் போட்டி போடுகிறார்கள். அப்போது ஒரு பந்து கொடுக்கப்படுகிறது. அந்த பந்தை வைத்து கோல் யார் போடுகிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முத்துக்குமரன் பவித்ராவிற்கு விட்டுக் கொடுத்து விடுகிறார். இதனால் பிக் பாஸ் கோபம் ஆகி இருக்கிறார்.
நான் உங்களிடம் எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன் இங்கு யாரும் விட்டுக்கொடுத்து விளையாட வரவில்லை, விளையாட்டை உண்மையாக விளையாடுங்கள் என்று.. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்காமல் விளையாடுகிறீர்கள். அதனால் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் இனி கிடையாது.
அதுபோல ஒரு நபரை சேவ் பண்ணுவதற்காக எவிக்ஷன் ஃப்ரீ பாசும் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இந்த வாரம் கடும் போராட்டத்திற்கு இடையே தான் எவிக்ஷன் பாஸை ரயான் பெற்றிருக்கிறார். இந்த பாஸுக்காக தான் ரஞ்சித் மற்றும் ஜாக்லின் இடையே கூட பிரச்சனை ஏற்பட்டது.
இவ்வளவு கஷ்டப்பட்டு பிரச்சனைகளுக்கு இடையே ரயான் இந்த பாஸ் பெற்றிருந்தார். ஆனால் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா செய்த செயலால் இப்போது அந்த பாஸும் செல்லாமல் ஆகிவிட்டது. அதுபோல தலைவராக பவித்ரா போக முடியாது என்றும் கூறிவிட்டார். இதனால் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா இருவரும் ப்ரோமோவில் அழுது கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே இது போல் தான் தொழிலாளர்கள் மற்றும் மேனேஜர் டாஸ்க் நடைபெற்ற போது கூட முத்துக்குமரன் அங்கிருக்கும் சைக்கிளை ஓட்ட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்த போது அதை வேகமாக சுற்றி தன்னுடைய கையை எடுத்து, உங்களுக்கு சைக்கிள் தானே ஓட்ட வேண்டும் இப்போ தன்னாலே சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லி இருந்தார்.
ஆனால் அது தவறு என்று பிக் பாஸ் அப்போதும் வீட்டிற்குள் தண்ணியை கட் பண்ணி இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் பவித்ராவுக்காக விட்டுக்கொடுக்கிறேன் என்று தியாகியாக மாறிய முத்துக்குமரனுக்கு செக் வைக்கிறேன் என்கிற பெயரில் மொத்த போட்டியாளர்களையும் பிக் பாஸ் தண்டித்திருக்கிறார்.
ஆனாலும் முத்துக்குமரன் அழுது கொண்டிருப்பதற்கு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பது பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எப்படியும் இத்தனைக்கும் காரணம் நீங்கதான் என்று எல்லோரும் வாக்குவாதம் செய்வார்கள், ஆனால் ப்ரோமோவில் அது காட்டப்படவில்லை. எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications