பிக் பாஸில் இன்று ஆரம்பமே அதிரடி காட்டிய விஜய் சேதுபதி! அப்போ முத்துக்குமரன் நிலைமை அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் டிசம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி இந்த வாரம் டாஸ்க்கில் சரியாக விளையாடாத முத்துக்குமரனை ரோஸ்ட் செய்வது போல பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த இன்றைய ப்ரோமோ வெளியாகிவிட்டது. இதற்காகவே காலையில் இருந்து ரசிகர்கள் பலர் காத்திருந்தனர். காரணம் இந்த வாரம் பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி எதை விசாரிக்க போகிறார் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் இன்றைய முதல் ப்ரோமோவில் நேற்று நடந்த பஞ்சாயத்தை தான் விஜய் சேதுபதி காரசாரமாக பேசி இருக்கிறார். நேற்று முத்துக்குமரன் ஒரு ஸ்டேட்டர்ஜி செய்து பவித்ராவை ஜெயிக்க வைப்பதற்காக டாஸ்க்கில் விளையாடினார். அதாவது அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்ற போது இந்த வாரத்தில் சிறப்பாக எல்லா டாஸ்க்கிளும் பங்கெடுத்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன், பவித்ரா, ஜெஃப்ரி மூன்று பேரும் தான் அந்த டாஸ்க்கில் விளையாடினார்கள்.
அந்த விளையாட்டுக்கு கோல்மால் என்று தலைப்பு வைத்ததாலோ என்னவோ முத்துக்குமரன் கோல் போடுவது மட்டுமல்ல இதில் எதுவும் தில்லாலங்கடியும் செய்யலாம் என்று நினைத்து விட்டார் போல. அவர் இந்த டாஸ்கிலாவது சுவாரசியமாக செய்ய வேண்டும் என்று நினைத்தாரா? அல்லது பவித்ராவுக்கு விட்டுக்கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தாரா? என்று தெரியவில்லை. அது அவருடைய மனதிற்கு மட்டும்தான் தெரியும்.
ஆனால் முத்துக்குமரன் வெளியே சொன்னது நான் வேண்டும் என்று விட்டுக் கொடுக்கவில்லை பவித்ரா எந்த பக்கமாக கோல் போட போகிறார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அதற்குள் அவர் போட்டு விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் முத்துக்குமரனின் இந்த விளையாட்டை எதிர்தரப்பில் எதிர்த்து விளையாடிய பவித்ரா கூட எதிர்பார்க்கவில்லை.
அதனாலேயே பவித்ரா வெற்றி பெற்றாலும் கூட முத்துக்குமரனிடம் நீங்க சரியாதான் விளையாடுனீங்களா? என்று கேட்டார். இதை கவனித்த பிக்பாஸ் முத்துக்குமார் விளையாடியது தப்பு என்று தன்னுடைய கோபத்தை மொத்தமாக காட்டினார். காரணம் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே சுவாரஸ்யமாக போகவில்லை என்பது பலருடைய கருத்து.
எந்த டாஸ்க் கொடுத்தாலும் அங்கு சண்டை சச்சரவு தான் செய்கிறார்களே தவிர அதை சுவாரஸ்யமாக கொண்டு போக மாட்டேன் என்கிறார்கள் என்று போட்டியாளர்கள் போல வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதியும் சலித்துக் கொண்டார். அதன் காரணமாக கூட நேற்று பிக் பாஸ் தன்னுடைய மொத்த அதிகாரத்தையும் எடுத்து இனி தலைவருக்கான டாஸ்க் கிடையாது என்று கடுமையாக தண்டனை கொடுத்திருக்கிறார்.
அதோடு வரும் வாரத்தில் இருந்து எவிக்ஷன் ஃப்ரீ பாஸும் கிடையாது என்று சொல்லிவிட்டார். இந்த வாரத்தில் ரயான் பெற்ற எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கூட செல்லுபடி ஆகாது என்று சொல்லிவிட்டார். அதனால் மொத்த போட்டியாளர்களும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் முத்துக்குமரன் நேற்று முழுக்க அழுது கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி முதல் ப்ரோமோவில் இதை பற்றி தான் பேசுகிறார். அதில் போட்டியாளர்கள் போன வாரத்தை விட இந்த வாரம் விளையாட்டை தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விளையாட்டை அவர்களே விளையாடுவார்கள் என்று பார்த்தால் விட்டுக் கொடுக்கிறோம் என்று புதியதாக டிராமா போடுகிறார்கள்.
அதோடு சிலர் நன்றாகவே நடிக்கிறார்கள். அது பற்றி விசாரிக்கலாம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார். இதனால் இன்று முழுக்க முத்துக்குமரனுக்கு தான் ரோஸ்ட் இருக்கிறது என்று தெரிகிறது. இதை நினைத்து தான் நேற்று முத்துக்குமரன் ஒருவேளை அழுதாறோ என்னவோ தெரியவில்லை... ஆனாலும் இன்று இரவு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications