பிக் பாஸை விட்டு வந்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரவீந்தர்.. விஜய் சேதுபதி ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் நேற்று ரவீந்தர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் பற்றி தன்னுடைய ரிவ்யூ சொல்லி இருந்தது அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதில் பல போட்டியாளர்கள் பற்றி அவர் வெளிப்படையாக அவர்கள் முன்பே தன்னுடைய ரிவியூவை சொல்லி இருந்தார். அது பற்றி பார்க்கலாம்

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பை பெற்றது. காரணம் இந்த சீசனில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை எப்படி கொண்டு போகப் போகிறார் என்பதுதான். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவும் விஜய் சேதுபதி ஒரு வாரத்திற்குள் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்து விட்டார். முகத்துக்கு நேராக போட்டியாளர்களின் நிறை குறைகளை வெளிப்படையாகவே விஜய் சேதுபதி பேசிவிடுகிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இப்படியான நிலையில் தான் வாக்குகளின் அடிப்படையில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். ரவீந்தர் வெளியேற்றம் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. காரணம் ரவீந்திர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் டாஸ்க் சரியாக விளையாடவில்லை என்றாலும் டஃப் போட்டியாளர்தான். அனைத்து போட்டியாளர்களையும் மனதை கண்ட்ரோல் செய்யும் விதமாகத்தான் இவருடைய விளையாட்டு ட்விஸ்டாக இருந்தது. இவர் வெளியே சென்று விட்டால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சுவாரசியமாக நிகழ்ச்சிகளை கொண்டு போவார்களா என்பது கேள்விக்குறி தான்.

அதே நேரத்தில் நேற்று வெளியேறுவதற்கு முன்பு அவர் ஒரு தரமான செய்கையை செய்து விட்டு வந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டதும் அவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது விஜய் சேதுபதி முன்பு வந்ததும் விஜய் சேதுபதி நீங்கள் உள்ளிருந்து இப்போ வெளியே வந்து விட்டீங்க இந்த நிகழ்ச்சியை உள்ளிருந்து பார்த்த அடிப்படையில் எப்படி ரிவ்யூ செய்வீங்க என்று கேட்க, முதலில் விஜய் சேதுபதியை பாராட்டி பேசி இருந்தார்.

நீங்க தரமா செஞ்சு விட்டுட்டீங்க எல்லாரையும் கதற வைத்துவிட்டீர்கள் என்று சொல்லியப்படியே வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் முதலில் நான் ரிவ்யூ சொல்லிவிட்டால் அவர்கள் இவன் வெளியில போனதே நல்லது என்று நினைத்து விடுவார்கள். அதனால் முதலில் அவர்களை பேச விட்டு பிறகு என்னுடைய ரிவ்யூ தொடங்குகிறேன். வேணும்னா பாருங்க நான் வெளியே வந்ததை தாங்கிக்க முடியலன்னு பலர் அன்பு மழை பொழிவாங்க என்று சொல்லிக்கொண்டு உள்ளே போட்டியாளரிடம் பேச தொடங்குகிறார்.

ஸ்கிரீனில் ரவீந்தரை பார்த்ததும் அவர் சொல்லியது போலவே உள்ளிருக்கும் போட்டியாளர்கள் அண்ணே நீங்க இல்லாம இனி நாங்க எப்படி இருக்க போறோம்னு தெரியலையே என்று பீலிங் மழையை பொழிந்தார்கள். அதற்கு நக்கலாக சிரித்தப்படியே நான் சொன்னது போலவே செய்தார்களா? என்று ரவீந்தர் கண்ணை காட்டியது ரசிக்கும்படி இருந்தது. என்னய்யா இந்த மனுஷன் இவ்வளவு இந்த நிகழ்ச்சியை கரைச்சு குடிச்சிட்டாரு இவரை போய் வெளியே அனுப்புறாங்களே என்று மனதிற்குள் லேசான ஒரு சிந்தனை வரத்தான் செய்தது.

ஆனாலும் அதற்கு பிறகு அவர் பேசியது தான் அதிரடி என்று சொல்ல வேண்டும். விஜய் சேதுபதி எப்படி முகத்துக்கு நேராக யாருக்கும் தயவு தாட்சனை இல்லாமல் நடந்து கொள்கிறார்களோ அதுபோல ரவீந்தர் தன்னுடைய ரிவியூ கொடுத்தார். முதலில் அர்னாவ் தான், அவரிடம் "அர்னாவ் பக்கா Fake, ஒழுங்கா விளையாடு" என்று சொன்னார். அதைத்தொடர்ந்து ரஞ்சித்திடம் "கிடைக்கிற இடத்தில் எல்லாம் சாமி, செல்லம், தங்கம் இப்படி எல்லாம் சொல்றதோ ஸ்டேட்டர்ஜி தான். ரொம்ப நாள் இதுல நடிக்க முடியாது. அதனாலதான் நானே வெளியே வந்துட்டேன். நீங்க உங்களுடைய இயல்பான விளையாட்டை விளையாடுங்க சார்" என்று சொல்லி இருந்தார்.

அடுத்ததாக தீபக்கிடம் "எப்பவும் எதிரியை முன்னாடி அடிங்க தீபக் பின்னாடி அடிக்க கூடாது. முன்னாடி பேசணும் பின்னாடி பேசக்கூடாது" என்று சொல்ல தீபக் முகம் இருண்டு போய்விட்டது. அடுத்ததாக அருண் பிரசாத் பற்றி பேசி இருக்கிறார். ஏற்கனவே அருண் பிரசாத் ரவீந்தரை விஜய் சேதுபதி பக்கத்தில் மேடையில் பார்த்ததும் நான் உங்களை புரியாமல் நடந்து கொண்டேன் சாரி என்று அவர் கேட்கும் போது ரவீந்தர் எல்லாரையும் போட்டியாளர்கள் நாமினேட் பண்ணுவாங்க ஆனா இவனை பிக்பாஸ் பண்ணனும் என்று உளறிவிட்டார். பிறகு அதை சமாளித்தார்.

அதனால் அருணின் முகம் வாடி இருந்தது, ஆனாலும் அவரிடம் "நீ எல்லார்கிட்டயும் இன்னசென்ட்டா நடிக்கிற. ஆனா நீ இன்னசென்ட் இல்ல. உனக்கு நல்லா தெரியும், எல்லாம் தெரியும். தெரிஞ்ச மாதிரி விளையாடு" என்று சொல்ல அதற்கு அருண் வேறு வழியில்லாமல் கையெடுத்து கும்பிட்டு இருந்தார். அவர் மனதிற்குள் போதும்டா சாமி இதுக்கு மேல எதுவும் பேசாத என்று சொல்வது போல தான் இருந்தது.

அடுத்ததாக எப்போதும் அரைகுறை உடையோடு சுற்றிக் கொண்டிருக்கும் சத்யா தான்... அவரைப் பற்றி பேசும்போது "ரொம்ப பிராங்கா சொல்லணும்னா சத்தியா இங்க பாடி முக்கியம் இல்ல. மைண்ட் முக்கியம். அதை வைத்து விளையாடு" என்று சொல்லி இருந்தார். அடுத்ததாக விஜே விஷாலை பற்றி பேசும்போதே "என்ன மன்னிச்சிடு விஷால் நான் உன்கிட்ட நடிச்சிட்டு தான் இருந்தேன். உன்னோட சாப்பாடுல இருந்து இப்ப தப்பிச்சுட்டேன். அதை சாப்பிட முடியலடா.." என்று கிண்டல் செய்து கொண்டு "யாரும் உனக்காக யோசிக்க மாட்டாங்க நீ தான் யோசிக்கணும். யார் யோசிக்கிறதையும் நீ பொது கருத்தா எடுத்துக்காத. இந்த வீட்டில என்டர்டைன்மென்ட் நீ தான்" என்று அவரை மட்டும் பாராட்டி இருந்தார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அடுத்ததாக ஜெஃப்ரி இடம் "வாயை, வார்த்தையை கவனமா பயன்படுத்து. அது உன் வாழ்க்கையை மாற்றும்" என்று சொன்னதும் ஓகே சார் என்று ஜெஃப்ரி ஆஜராகிவிட்டார். அடுத்ததாக முத்துக்குமரனிடம் இந்த தளத்தை எப்படி பயன்படுத்துகிற அறிவு, ஆற்றல், பேச்சு திறமை எல்லாம் இருக்கு. நான் நம்புகிற ஆளில் நீயும் ஒரு ஆள்" என்று பாசிட்டிவாக பேசியிருந்தார்.

ஆண்கள் அணி முடிந்ததும் பெண்கள் அணியில் பவித்ரா பற்றி முதலில் பேசினார். அவரிடம் "ஆறு நாள் பாய்ஸ் அணியில இருந்த. ஏதோ ஒன்னு முயற்சி பண்ணிட்டு இருந்த. ஆனா அதுக்கும் நீ ரியலா இல்ல. ஒரு இடத்துல யாருக்காவது ரியலா இரு" என்று சொல்ல பவித்ராவின் முகமும் சோகத்தின் உச்சத்துக்கு போய்விட்டது. அடுத்ததாக சௌந்தர்யாவிடம் "நீ எதுக்காக வந்த இந்த இடம் உனக்கு எதுக்கு தேவை? நீ முன்னாடி போகணும்.. அதையெல்லாம் நீ நோக்கி நடக்கனும்னா உட்கார்ந்து தேய்கிறதை நிறுத்து" என்று சொல்லி முடித்தார்.

அடுத்ததாக தர்ஷாவிடம் "நீ விளையாடுற பாதி கேம் ஃபேக். அது உள்ள இருந்த எனக்கு ரொம்ப பச்சையா தெரிஞ்சது" என்று சொல்லிவிட்டு சுனிதாவிடம் "இந்த வீட்ல இருக்கிற ஹானஸ்ட் ரியல் நீ. தமிழ்நாடு உன்ன நிச்சயம் கொண்டாடும் நம்பு" என்று சொல்ல, அதை கேட்டு சுனிதா உற்சாகத்தில் ஆர்ப்பரித்துவிட்டார். அடுத்ததாக அன்ஷிதாவிடம் "நீ நல்லா விளையாடு. கிடைத்த வாய்ப்பை சரியா பயன்படுத்து" என்று இரண்டே வார்த்தைகளில் முடித்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து வீட்டின் தலைவராக இருந்த தர்ஷிகாவிடம் "நீ செம கேடி. பயங்கரமான ட்விஸ்ட் பண்ணி விளையாடிட்டு இருக்கிற. நல்ல ஃபைட் கொடுக்குற அதை ரியலிஸ்டா கொடு" என்று சொல்லி இருந்தார். இவர்களைத் தொடர்ந்து சாச்சிகாவிடம் தேவைப்படுகிற இடத்தில் மட்டும் பேசு தேவையில்லாத இடத்தில் நீயா போய் பேசி மாட்டிக்காத என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஜாக்லினிடம் "இந்த கேமோட களம் புரிந்து அந்த சார்ட்ல இருந்து வெளியே வராம விளையாடு. நான் நம்புற இரண்டாவது ரியல் பர்சன் நீ தான்" என்று ஜாக்குலீனுக்கு தன்னுடைய சப்போர்ட்டை தெரிவித்திருக்கிறார். அடுத்ததாக ஆர் ஜே ஆனந்தியிடம் "நீ ஒரு நல்ல ஹியூமன். ஆனால் இந்த கேமை பயந்து பயந்து ரொம்ப நாள் தள்ளிட்டு போக முடியாது. சனி, ஞாயிற்றுக்கிழமையில ஸ்கோர் பண்றதை விட மீதி 5 நாள்ல ஸ்கோர் பண்றது தான் ரொம்ப முக்கியம் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த விஜய் சேதுபதி இவர் பேசியதை கேட்டு போட்டியாளர்களின் முகம் கலவரமாக மாறி இருப்பதை பார்த்து ரவீந்தர் சார் சொன்னது எல்லாம் அவருடைய மனதில் இருந்தது. அது மக்களுடைய கருத்து கிடையாது. ஆனால் இப்போது அவர் சொன்னதை புரிந்து கொண்டு நீங்கள் விளையாடுங்கள் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+