பிக் பாஸ் 8ல் இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன்! கடைசியில் சிக்கியது இவங்களா? எதிர்பாராத வெளியேற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் இரண்டு போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் யார் இருப்பது என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டு வெற்றிக்கரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் அதை தொடர்ந்து ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களும் அறிமுகம் ஆகி இருந்தனர்.

அதில் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தற்போது பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்களில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டிக்கெட்டை வெற்றி பெற்று ரயான் இந்த சீசனில் முதல் ஆளாக பைனலுக்கு நுழைந்து இருக்கிறார்.
இந்த டாஸ்க்கில் ஆரம்பத்திலிருந்து போட்டி போட்ட முத்துக்குமரன் கடைசியில் இரண்டு மதிப்பெண்களில் வெற்றியை தழுவ விட்டார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எவிக்ஷனாகி வருவது வழக்கம்தான். ஆனால் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததால் கடந்த சில வாரங்களாகவே இரண்டு எவிக்சன் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் அவர்களில் தீபக், ஜாக்குலின், ரயான், ராணவ், பவித்ரா, அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் இந்த வார எலிமினேஷனக்கான நாமினேஷனில் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்களில் தற்போது வரைக்குமான வாக்குகளின் அடிப்படையில் தீபக் முதலிடத்தில் இருக்கிறார்.
அவரை தொடர்ந்து இந்த வார டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்ற ரயான் இருக்கிறார். இவர்களை தொடர்ந்து கடைசி இடத்தில் இந்த வாரத்தில் மஞ்சரி இடம் பிடித்திருக்கிறார். அடுத்ததாக பவித்ரா மற்றும் அருண் குறைந்த வாக்குகள் பெற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் மஞ்சரி முதலாவதாக வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரைத் தொடர்ந்து பவித்ரா அல்லது அருண் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications