பிக் பாஸ் போட்ட பிளான்! கண்ணீரோடு இன்று வெளியே போகும் ஆண் போட்டியாளர்! நாளை அந்த நடிகை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இன்று ஜெஃப்ரி எவிக்ஷன் ஆவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபோல நாளை அன்ஷிதா எவிக்ஷனாக போகிறார் என்றும் கூறப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடைபெற இருக்கிறது. அதாவது இன்று சனிக்கிழமை எபிசோடில் ஜெஃப்ரி வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் வரைக்கும் ஜெஃரிக்கு விஜய் சேதுபதி அதிகமாக சப்போர்ட் கெடுக்கிறார், அவருடைய தவறுகளை விஜய் சேதுபதி தட்டி கேட்கவில்லை அதனால் தான் ஜெஃப்ரி மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டிருக்கிறார் என்று சில ட்ரோல் எழுந்து வந்தது.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராணவின் தந்தை கூட ஒரு பேட்டியில் ஜெஃப்ரி குறித்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தார். கழுத்தில் கையை வைத்து இடிக்கும் போது இதுபோல விளையாடக்கூடாது என்று விஜய் சேதுபதி கண்டித்திருந்தால் ராணவ் கை உடைவதற்கு ஜெஃப்ரி காரணமாக இருந்திருக்க மாட்டார், ராணவ் கையில் அடிபட்டு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட ஜெஃப்ரி சிரித்து அவன் நடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தார் என்று தன்னுடைய அதிருப்தியை காட்டி இருந்தார்.
அதன் காரணமாக கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி ஜெஃப்ரியிடம் கடுமையாகவே நடந்து கொண்டார். அதுபோல இந்த வாரத்தில் ஜெஃப்ரியும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்திருந்தார். இந்த வார ஏழு போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஜெஃப்ரி வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருக்கிறார்.
இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதனால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஜெஃப்ரி இன்று வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. அது போல நாளை எபிசோடில் அன்ஷிதா வெளியேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வாக்குகளின் அடிப்படையில் அன்ஷிதா, ஜெஃப்ரி, விஜே விஷால் என மூன்று பேருதான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். இவர்களில் இரண்டு பேர் வெளியேற்றப்படுகிறார்கள். இந்த வாரத்தில் விஜே விஷால் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. விஜே விஷால் சௌந்தர்யா குறித்து பேசியது வெளியே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அப்போது விஜய் சேதுபதி விஜே விஷாலிடம் நீங்க ஒரு பெண்ணை பார்த்து டீக்கடையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போல பேசி இருக்கீங்க என்று திட்டியிருந்தார். அதற்கு விஷால் அப்போதைக்கு சௌந்தர்யாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் ஒரு பெண் பற்றி அவர் இல்லாத இப்போது தரைகுறைவாக பேசியது தவறு என்று நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் போன விஷாலின் தோழி நேகா உட்பட சௌந்தர்யாவின் காதலர் விஷ்ணுவும் பேசியதால் சௌந்தர்யாவிடம் விஜே விஷால் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இதனால் அடுத்த வாரத்தில் இவர்கள் இருவருக்குள் என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்ப்பதற்காக இவர் சேவ் செய்யப்பட்டாரா? என்று சந்தேகம் எழுகிறது. இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டும் தான் இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இருக்கிறது ஆனாலும் இந்த சீசனில் மட்டும் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது இந்த சீசனில் யார் டைட்டில் வெற்றி பெற போறாங்க என்று நீங்க நினைக்கிறீங்க.












Click it and Unblock the Notifications