பிக் பாஸ் 8ல் unfair எவிக்ஷன்! இன்று வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா? அப்போ மக்கள் ஓட்டு வேஸ்ட்டா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை எபிசோடில் ராணவ் எவிக்ஷன் செய்யபடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் என்றும் கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 எட்டாவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இன்று 90 வது நாள் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்னும் ஒரு சில வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

bigg boss tamil 8 bigg boss 8 8

இப்போது வரைக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதில் மஞ்சரி, ராணவ், ரயான், அருண், விஷால், ஜாக்குலின், பவித்ரா, தீபக் ஆகிய 8 போட்டியாளர்கள் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேசன் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதில் நேற்று வரைக்கும் வெளியான தகவல்களின்படி தீபக், விஷால், ரயான், ராணவ் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

அதுபோல மஞ்சரி, பவித்ரா, ஜாக்குலின், அருண் ஆகியோர் கம்மியான வாக்குகள் பெற்று இருப்பதால் இவர்களில் ஒருவர் தான் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது. குறிப்பாக மஞ்சரி கடைசி இடத்தில் இருப்பதால் அவரும் அவரோடு சேர்ந்து அருண் அல்லது பவித்ரா வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டன.

ஆனால் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ராணவ் மற்றும் மஞ்சரியை எலிமினேட் செய்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று சனிக்கிழமை எபிசோடில் ராணவ் வெளியேற்றப்படுவதாகவும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் மஞ்சரி வெளியேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அப்போ மக்கள் வாக்கு செலுத்துவதால் பிரோஜனும் இல்லையா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல வைல்ட் கார்ட் போட்டியாளராக ராணவ் மற்றும் மஞ்சரி உட்பட ஆறு போட்டியாளர்கள் களம் இறங்கி இருந்தனர். அவர்களில் ஏற்கனவே மூன்று பேர் எவிக்ஷனாகி விட்டனர்.

இப்போது இரண்டு பேர் எவிக்ஷனாவதால் ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல இவர்களில் ரயான் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்து விடலாம் என்று கடந்த நான்கு சீசன்களாக போராடி போட்டியாளராக வந்த ராணவ் கனவு நிறைவேறாமலே அவர் வெளியேற்றப்படுவது அவருடைய ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

சில வாரத்திற்கு முன்பு டாஸ்கில் ஜெஃப்ரி தள்ளிவிட்டதால் ராணவ் கையில் அடிபட்டதால் அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அதே நேரத்தில் ராணவ் வலியால் துடித்ததை பார்த்து அவருடைய தந்தை ஒரு பேட்டியில் பேசியிருந்தால் அதில், விஜய் சேதுபதி உள்ளிருக்கும் ஒரு சில போட்டியாளர்களுக்கு மட்டும் சப்போர்ட் செய்கிறார். ராணவ் என்ன பேச வந்தாலும் பேசவிடாமல் தடுத்து விடுகிறார் என்று பேசியிருந்தார்.

அதனால் இப்போது ராணவை விஜய் டிவி வெளியேற்றி இருக்கிறார்களா? என்ற கேள்விகளும் எழுகிறது. கடந்த வாரத்தில் ராணவ் வெளியேற்றப்பட்டு இருந்தால் பெரிய அளவில் பேசப்படப்பட்டிருக்கும் என்பதற்காக அடுத்த வாரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறதா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+