பிக் பாஸில் நாளை 2 வைல்ட் கார்ட் என்ட்ரி! இனி பெண்கள் பக்கம் பலம்! அந்த விஜய் டிவி பிரபலமும் வர்றாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் தீபாவளி அன்று இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. யார் அவர்கள் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கி மூன்று வார முடிவடைந்திருக்கும் நிலையில் நான்காவது வாரத்தில் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் 3 பேர் எலிமினேஷன் ஆகி இருக்கின்றனர்.

television bigg boss tamil 8 bigg boss 8

அதில் இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். ஒரு பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதில் ஒன்பது ஆண் போட்டியாளர்களும், 9 பெண் போட்டியாளர்களும் இருந்தனர்.

விஜய் மாநாட்டில் பேசிய "அந்த" டயலாக் எஸ்.ஜே சூர்யா பட டயலாக்கா? அதுவும் கிரண் பேசியதா?
இந்த நிலையில் நாளை தீபாவளி அன்று இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் அதாவது நடிகை ஐஸ்வர்யா. பெண்கள் சார்பாக அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிகை லட்சுமியின் மகள்தான். அது போல ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டலான கதாபாத்திரங்களிலும் நடித்து இருந்தார்.

தற்போது சீரியல்கள், திரைப்படம் என்று பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களம் இறங்க இருக்கிறார். அவரைத் தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்து இப்போது வெள்ளித்திரையிலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் TSK அதாவது திருச்சி சரவண குமார் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

television bigg boss tamil 8 bigg boss 8

இவர்கள் இருவரும் நாளை எபிசோட்டில் என்ட்ரி கொடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது ஏற்கனவே வைல்ட் கார்டாக வந்த போட்டியாளர்கள் கடைசி வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். அதிலும் கடந்த ஏழாவது சீசனில் வைல்ட் கார்டாக வந்த அர்ச்சனா தான் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார்.

மேடையில் விஜய் சேதுபதி தான் அப்படி பேச சொன்னாரு! ஆனால் அங்கு நடந்தது வேறு! அர்னவ் சொன்ன ரகசியம்
அதுபோல இந்த சீசனிலும் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் பெரிய அளவில் சுவாரசியம் ஏற்படுத்தவில்லை என்ற கருத்து ஒரு பக்கம் மக்கள் மனதில் நிலவி வருகிறது. அந்த நிலையில் சவுண்ட் சரோஜாவான ஐஸ்வர்யா மற்றும் காமெடி கிங் என்று அழைக்கப்படும் டி எஸ் கே இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+