பிக் பாஸ் 8: ஆரம்பமே அதகளமானது.. வாயை விட்டு சிக்கிய சாச்சனா.. முதல் நாளே வெளியேற காரணம்!
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட சாச்சனா இன்று எலிமினேஷன் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் முதல் 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் நடக்கும் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.
ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியை கொண்டு போகப் போகிறாரோ என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்த நிலையில் முதல் நாளே ரசிகர்களின் பாராட்டை விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார். ஆனால் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கி 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.

எட்டாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள்தான். அதுபோல இந்த சீசனில் வீட்டிற்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது. கோட்டிற்கு இரண்டு பக்கமும் வித்தியாசமான அறைகள் இருக்கிறது. ஒரு பக்கத்தில் சௌகரியமான பெட்ரூம் வசதி உட்பட பல வசதிகள் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் வசதிகள் குறைவாக இருக்கிறது.
அதுபோல இந்த சீசனில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் விளையாடப் போகிறார்கள். அவர்களில் ஆண்களுக்கு எந்த பக்கம் வேண்டும்? பெண்களுக்கு எந்த பக்கம் வேண்டும் என்று பிக் பாஸ் கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் முதலில் இதில் முடிவெடுக்க முடியாமல் போட்டியாளர்கள் திணறி இருந்தனர். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று ஆண் போட்டியாளர்களும் மூன்று பெண் போட்டியாளர்களும் வந்த போதுதான் பிக்பாஸ் இதை கேட்டிருந்தார்.

அப்போது பெண் போட்டியாளர்கள் யோசித்து எங்களுக்கு பிங்க் கலர் அதாவது அதிகமான வசதிகள் இருக்கும் பகுதிகள் வேண்டும் என்று சொல்லி இருந்தனர். அதற்கு ஆண்கள் தரப்பில் முதலில் மறுத்து பேசி இருந்தனர். பிறகு சரி எது வேண்டுமோ அதை தருகிறோம் ஆனால் நாங்கள் சொல்லும் வாரத்தில் பெண் போட்டியாளர்கள் யாரும் ஆண்களை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யக்கூடாது என்று ஒரு அக்ரீமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.
இதற்கு ஆரம்பத்தில் இருந்த நான்கு பெண் போட்டியாளர்களும் சரி என்று சம்மதம் தெரிவித்திருந்தனர். அதற்குப் பிறகு வந்த நடிகை தர்ஷனா மற்றும் ஜாக்குலின் இருவரும் இதற்கு நாங்கள் உடன்பட மாட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் பிக் பாஸ் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். அதாவது இதுவரைக்கும் இல்லாத வகையில் 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் நடக்கப்போகிறது என்று கூறி இருக்கிறார்.
இதனால் யார் வெளியேற போகிறார்கள் என்று ஓபனாக நாமினேஷன் செய்யவும் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சாச்சனா தான் எலிமினேஷன் ஆகி வெளியே போகிறேன் என்று சொன்னது ஒளிபரப்பாகி இருக்கிறது. அதாவது சாச்சனா உட்பட முதல் மூன்று பெண் போட்டியாளர்கள் தான் தங்களுக்கு சௌகரியமான பெட்ரூம் வசதியோடு இருக்கும் பக்கம் வேண்டும் என்று கேட்டார்கள்.
அதனால் ஆண்கள் சொன்னது போல இந்த வாரத்தில் ஆண் போட்டியாளர்களை பெண்கள் நாமினேஷன் செய்யக்கூடாது என்று சொன்னால் பெண் போட்டியாளர்கள் நமக்குள் தான் நாமினேஷன் செய்ய வேண்டியது இருக்கும் அதிலும் இந்த முடிவை எடுத்தது நாம நான்கு பேரும் தான், அதனால் நீங்கள் என்னை நாமினேஷன் செய்தால் நான் தாராளமாக வீட்டில் இருந்து போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

நிகழ்ச்சிக்கு விளையாட வேண்டும் என்று ஆர்வத்தோடு வந்திருக்கிற போட்டியாளர் முதல் நாளே தியாக செம்மலாக மாறி நான் வெளியே போகிறேன் என்று சொல்லி இருப்பது இவங்க எதற்காக இங்கு வந்தாங்க? எதை நிரூபிப்பதற்காக இப்படி பேசுறாங்க என்ற கேள்விகளை உருவாக்குகிறது. நேற்று விஜய் சேதுபதி முன்பு மேடையில் பேசும்போது நான் தைரியமாக எந்த முடிவும் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று பேசிய சச்சிதா இன்று முதல் ஆளாக நானே போறேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதுபோல தற்போது வெளியான தகவலின் படி சச்சிதா தான் முதல் எலிமினேஷன் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்படும்போது பருத்தி முட்டை இதுக்கு குடோனிலேயே இருந்திருக்கலாமே என்று தான் தோணுகிறது. ஆனாலும் இவர் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி வைல்டு கார்டில் இந்த நிகழ்ச்சியில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications