பிக் பாஸ் 8: யாரை கேட்டு இங்க வந்த? மைக்கை வீசிடுவேன்! சஞ்சனாவை திட்டிய விஜய் சேதுபதி.. அட்ராசிட்டி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி (அக்டோபர் 6) இன்று தொடங்கி இருக்கிறது. இதில் இரண்டாவது போட்டியாளராக சஞ்சனா கலந்து கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியோடு மகாராஜா திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் அவரை மேடையில் பார்த்ததும் "யாரை கேட்டு இங்க வந்த" என்று விஜய் சேதுபதி செல்லமாக கோவப்பட்டு இருக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவரோடு மகாராஜா திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த சஞ்சனா இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகி இருக்கிறார். அவரை பார்த்ததும் விஜய் சேதுபதி நீ யாரைக் கேட்டு இங்க வந்த என்று கோபப்பட்டு இருக்கிறார்.

அப்போது ஒரு ரசிகர் சஞ்சனா என்று கத்த.. ஒரு அப்பா நான் இங்கே இருக்கேன் எவன்டா என் பொண்ணை பார்த்து கத்துறது மைக்கை தூக்கி வீசிடுவேன் என்று மைக்கை வீசுவது போல விளையாட்டாக செய்கிறார். பிறகு சஞ்சனா பதட்டமாக இருப்பதை பார்த்து நீ கொஞ்சம் நேரம் பொறுமையா இரு, நீ யார் என்பதை பற்றி பிறகு பேசலாம் உன்னை பற்றிய குறும்படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் பேசிய வீடியோவை போடுகின்றனர்.
பிறகு சஞ்சனாவிடம் நீ எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நீதான் ஏற்கனவே பேமஸ் ஆகிட்ட மகாராஜா திரைப்படத்தில் நீ நல்லாவே நடிச்சிருந்த, அந்த படம் மூலம் உனக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சிருக்கு, பிரபலமும் கிடைச்சிருக்கு. இந்த மேடைக்கு வந்த போது கூட உன்னுடைய ரசிகர் ஒருவர் கத்துனாரே என்று கேட்க சஞ்சனா சிரித்துக்கொண்டிருக்கிறார்.
பிறகு சஞ்சனாவின் குடும்பத்தினரை மேடைக்கு வர வைத்து இவர் எதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு போக வேண்டும் என்று நீங்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு சஞ்சனாவின் அம்மா என் பொண்ணு தைரியமா இருக்கணும் என்று சொல்ல சஞ்சனா ரொம்ப தைரியமான பொண்ணு என்று எனக்கு தெரியுமே என்னுடைய முகத்தை பார்த்து சொல்லு நீ தைரியமான பொண்ணு இல்லைன்னு என்று சொல்ல, சஞ்சினா சிரித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போதும் நான் நடித்த படம் மகாராஜா எனக்கு ஐம்பதாவது படம் ஆனால் இந்த பொண்ணு சஞ்சனா அந்த படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் அழகாக நடிச்சது என்று அவரை பாராட்டுகிறார். பிறகு உன்கிட்ட என்ன சொல்லுதுன்னு எனக்கு தெரியல ஏன்னா உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதனால நான் பார்மலா பேசணும்னு தோணல.
நான் கொஞ்சம் ஸ்ட்ரீட்டா இருந்தா நீ வருத்தப்படாத. உனக்கு இங்க என்னை பாத்து அப்பான்னு கூப்பிடனும்னு தோணுச்சுன்னா அப்பானு கூப்பிடு. சார்னு கூப்பிடனும்னு தோணுச்சுன்னா சார்ன்னு கூப்பிடு. எதுனாலும் உன்னுடைய இஷ்டம். ஆனால் என்னைக்காவது ஒரு நாள் மட்டமா கேம் விளையாடிட்டு வார கடைசியில் வந்து அப்பான்னு ஏமாத்த கூடாது என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications